Thursday, November 20, 2014

தந்தையால் கொடுமைப்படுத்தப்ப சிறுவர்கள் ஹட்டனில் பஸ்ஸில் மீட்பு

மஸ்கெலியா- சாமிமலையிலிருந்து, ஓல்டன் தனியார் பஸ்ஸில் ஹட்டனுக்கு பயணம்செய்த இரண்டு சிறுவர்களை ஹட்டன் பொலிஸார் இன்று வியாழக்கிழமை மீட்டுள்ளனர். சாமிமலை கொணக்கொலை தோட்டத்தைச் சேர்ந்த நாதன் லோகதாஸ் (வயது 5), நாதன் நிஷாந்தினி (வயது 11) ஆகிய இரண்டு சிறுவர்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.

தந்தையால், தாங்கள் கடுமையாக கொடுமைப்படுத்தப்படுவதாக கூறியே அவ்விருவரும் வீட்டைவிட்டு வெளியேறி ஹட்டனுக்கு வந்துள்ளனர். அவர்களுடைய தாய் நித்தியக்கல்யாணி தோட்டத்தில் வேலைசெய்வதாகவும் தந்தையான நாதன் தலைநகரில் தொழில்புரிவதாகவும் அவ்விரும் வழங்கியுள்ள வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறையில் வீட்டுக்குவரும் அப்பா, தங்களை அடித்து துன்புறுத்துவதாகவும் தட்டிக்கேட்கும் அம்மாவையும் அடிப்பதாகவும் அவ்விருவரும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
தங்களுக்கு ரொஷான், நிலூன் என்ற இரண்டு தம்பிமார்கள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்றிரவு போதையில் வந்த தந்தை, தம்பியை அடித்தார். அதன்பின்னர் தம்பி தூங்கிவிட்டார். விடிந்து பார்த்தபோது தம்பியை காணவில்லை. தம்பியை தேடிக்கொண்டு நான் சாமிமலைக்கு வந்தேன். தம்பி பஸ்ஸில் உட்காந்திருந்தார் நானும் அவருடன் வந்துவிட்டேன் என்று லோகதாஸின் அக்காவான நிஷாந்தினி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இவ்விருவரும் தந்தையால், ஏற்கெனவே கொடுமைப்படுத்தப்பட்ட நிலையில் மஸ்கெலியா பொலிஸாரினால் மீட்கப்பட்டிருந்தனர். அதன்பின்னர் பெற்றோருக்கு அறிவுரை வழங்கி இரண்டு சிறுவர்களுக்கும் புனர்வாழ்வளித்து அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


தனியார் பஸ் சாரதி மற்றும் நடத்துனரின் முறைப்பாட்டுக்கு அமையை ஹட்டனில் வைத்து அவ்விருவரையும் மீட்ட ஹட்டன் பொலிஸார், அவ்விருவரையும் மஸ்கெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்கவுள்ளதாக தெரிவித்தனர்.Krin -CildKrin -Cild-01

No comments:

Post a Comment