லண்டனில் சில மாதங்களுக்கு முன்னர், 3 முஸ்லீம் இளைஞர்களை பொலிசார் கைதுசெய்து இருந்தார்கள். இவர்கள் மூவரும் ஒரு ஹோட்டல் அறையில் வெள்ளைக்கார பெண்ணுடன் இருந்தவேளையே கைதுசெய்யப்பட்டார்கள். இவர்கள் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடியதாக ஹோட்டல் ஊழியர் பொலிசாருக்கு தகவல் தெரிவித்திருந்தார். இவர்களோடு தங்கியிருந்த பெண்ணிற்கு வயது 17.
இச்சிறுமி இறுதிவரை பொலிசாருக்கு எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை என்பது ஒரு புறம் இருக்க, இந்த மூவரோடு தொடர்பில் உள்ள ஏனைய 3 முஸ்லீன் இளைஞர்களையும் பொலிசார் கைதுசெய்தார்கள். அவர்களின் தொலைபேசியில் இருந்த சில இலக்கங்களை, அவர்கள் சோதித்துப் பார்த்தவேளை வேறு சில ஆங்கிலப் பெண்கள் இவர்களோடு தொடர்பில் உள்ளதை பொலிசார் அறிந்துகொண்டார்கள்.
அவர்களும் இச்சிறுமியைப் போல, 17 மற்றும் 16 வயதுடையவர்கள். இதில் சிலர் வீட்டை விட்டு வெளியேறிய பெண்களும் அடங்குகிறார்கள். இந்த 6 முஸ்லீம் இளைஞர்களும், சிறுமிகளை பேஸ் புக் ஊடாக தொடர்புகொண்டு, அவர்களோடு உறவாடி பின்னர் விபச்சாரத்திற்கு உள்ளாகியுள்ளார்கள் என்று பொலிசார் நம்புகிறார்கள். இந்த வட்டத்தில் உள்ளவர்கள், இப்பெண்களை மேலும் சிலருக்கு விபச்சாரத்திற்கு விட்டுள்ளார்கள்.
ஆனால் பொலிசாரிடம் சிக்கிக்கொண்ட எந்த சிறுமியும் இவர்களை காட்டிக்கொடுக்கவில்லை என்பது தான் அதிர்சியான விடையம். ஒரு ஹோட்டல் அறையில் சம்பந்தமே இல்லாத 3 பே ஒரு பெண்ணுடன் இருக்கிறார்கள் என்றால் அங்கே என்ன நடக்கும் என்பது ஒன்றும் தெரியாத விடையம் அல்ல. ஆனால் சிறு வயதில் இருந்தே குறித்த இளைஞர்கள் அவர்களுக்கு பழக்கம் என்பதனால் அப்பெண்கள் அவர்களை காட்டிக்கொடுக்கவில்லை என்று பொலிசார் நினைக்கிறார்கள்.
இவர்களைப் போன்ற இளைஞர்கள் லண்டனில் பலர் இருக்கிறார்கள். இவர்கள் கஷ்டப்பட்ட , வீட்டை விட்டு வெளியேறவேண்டும் என்று நினைக்கும் பெண்கள் மற்றும் மது பழக்கத்திற்கு அடிமையக வயது குறைந்த பெண்களை குறிவைக்கிறார்கள். அவர்களோடு பழக்கத்தை ஏற்படுத்தி விபச்சார தொழிலில் இறக்குகிறார்கள்.
இதனால் பெரும் பணம் சம்பாதிக்கலாம், அப்பா அம்மாவின் உதவியின்றி தனித்து சந்தோஷமாக வாழலாம் என்று எல்லாம், சிறுமிகளுக்கு ஆசை காட்டி வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. பொலிசார் இந்த 6 பேரையும் நீதிமன்றில் நிறுத்தியுள்ளார்கள். இருப்பினும் இவர்கள் மேல் சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்படவில்லை. இதனால் இவர்கள் அனைவரும் விடுதலையாக இருந்தார்கள். ஆனால் நீதிபதி திடீர் என்று ஒரு முடிவை எடுத்துள்ளார்.
அது என்னவென்றால், குற்றம் நிரூபிக்கப்படவில்லை தான். ஆனால் இனிமேல் நீங்கள் அனைவரும் எந்த ஒரு வயது குறைந்த பெண்ணுடனும் தொடர்புகொள்ள முடியாது என்று அவர் தனது தீர்ப்பில் தெரிவித்துவிட்டார்.இதுபோல பலர் சிலவேளைகளில் சட்டத்தில் இருந்து தப்பிப்பது உண்டு. உங்கள் வீட்டில் உள்ள பிள்ளைகள் பேஸ் புக்கில் யாருடன் பழகுகிறார்கள் என்பதனை நீங்கள் நிச்சயம் தெரிந்து வைத்திருப்பது நல்லது.
|
No comments:
Post a Comment