Sunday, November 9, 2014

முன்னாள் பேராசிரியர் சிவசாமி காலமானார்


யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருத மொழித்துறை முன்னாள் பேராசிரியர் வி சிவசாமி, தமது 81வது வயதில் நேற்று யாழ்ப்பாணத்தில் காலமானார். 
சமஸ்கிருதத்தில் புலமை பெற்றிருந்த அவர் இந்து கலாசாரம், இசைநடனம் போன்றவற்றில் திறமையும் மற்றும் தமிழ், ஆங்கில எழுத்தாளராகவும் திகழ்ந்தார்.
1974ஆம் ஆண்டு முதல் அவரால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பல மாணவர்கள் பயன்பெற்றனர்.
1933ம் ஆண்டு ஒன்பதாம் மாதம் 16ம் திகதி அவர் புங்குடுதீவில் பிறந்தார்.
ஆரம்பக்கல்வியை புங்குடுதீவில் கற்றார். பின்னர் யாழ்ப்பாண கல்லூரியில் இணைந்தார்.
1955ம் ஆண்டு  பேராதனை பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருத, தமிழ் மற்றும் வரலாறு ஆகியவற்றை கற்பதற்காக இணைந்தார்.
1961ல் லண்டன் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருத பட்டம் பெற்றார்.
1958முதல் 1974 வரை அவர் யாழ்ப்பாண கல்லூரியிலும் 1962 முதல் 1965 வரை பேராதனை பல்கலைக்கழகத்திலும் அவர் விரிவுரையாளராக செயற்பட்டார்.
வாழ்வில் திருமண பந்தத்தில் இணையாத அவர் வாழ்நாள் முழுதும் கல்விக்காக அர்ப்பணிப்பை செய்தார்.
இவரது நூல்கள்
திராவிடர் - ஆதிவரலாறும் பண்பாடும் (1973)
தென்னாசியக் கலை மரபில் நாட்டிய சாஸ்திர மரபு (1992)
தென்னாசிய சாஸ்திரிய நடனங்கள் - ஒரு வரலாற்று நோக்கு (1998)
தமிழும் தமிழரும் (1998)
இந்துப் பண்பாடு அன்றும் இன்றும் (2005)
தொல்பொருளியல்-ஓர் அறிமுகம் (1972)
ஞானப்பிரகாசரும் வரலாற்றாராய்ச்சியும் (1974)
யாழ்ப்பாணக் காசுகள் (1974)
ஆரியர் ஆதிவரலாறும் பண்பாடும் (1976)
கலாமஞ்சரி ஜ1983ஸ
பரதக்கலை (1988)
சமஸ்கிருதம்- தமிழ் சிற்றகராதி (1987)
தீவகம் - ஒரு வரலாற்று நோக்கு (1990)
http://www.tamilwin.com/show-RUmszBTdKXfx2.html

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட விநாயகமூர்த்தி சிவசாமி அவர்கள் 08-11-2014 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற விநாயகமூர்த்தி, மகேஸ்வரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
விசாலாட்சிப்பிள்ளை(ஓய்வுபெற்ற அதிபர்), பூமணி(ஓய்வுபெற்ற கலாசார உத்தியோகத்தர்), சரோஜினிதேவி(ஓய்வுபெற்ற ஊழியர் புங்குடுதீவு ப.நோ.கூ.சங்கம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரதீபன்(கனடா), விநோதன்(தபால் அலுவலக ஊழியர்- புங்குடுதீவு) தேவரஜனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மகேஸ்வரன்(ஓய்வுபெற்ற லிகிதர்- மஸ்கன் கம்பனி), சண்முகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுகந்தினி, அருட்சிவம் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
சுயதீபன், விஜயதீபன், சுவாதி, அட்சரா, நிதூசனா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-11-2014 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:இல 31, 6ம் ஒழுங்கை,
பலாலி வீதி,
கந்தர்மடம்,
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பூமணி — இலங்கை
செல்லிடப்பேசி:+94777030661

No comments:

Post a Comment