Tuesday, November 18, 2014

லண்டனில் பறவைக் காச்சல்: 6,000 வாத்துகள் கொலை, 13,000 முட்டைகளும் அழிப்பு !

பிரிட்டனில் யோக்ஷியார் மாநிலத்தில் உள்ள பண்ணை ஒன்றில், இறந்து கிடந்த பறவையை அடுத்து பண்ணை உரிமையாளர் மருத்துவர்களை அழைத்துள்ளார். அவர்கள் வந்து அதனை சோதனையிட்டபோது, பறவைக் காச்சலால் தான் அப்பறவை இறந்துள்ளது என்று உறிதிப்படுத்தியுள்ளார். எபொல்லா வைரஸ் எவ்வளவு ஆபத்தான வைரசோ அதனை விட மிகவும் ஆபத்தான வைரஸ் பறவைக் காச்சல் தாக்கிய பறவைகளில் காணப்படுகிறது. காற்றில் மிதந்து செல்லக்கூடிய இந்த வைரஸ் அருகில் உள்ள வாத்து, கோழிகள், என்று பல இனங்களை உடனே தாக்க வல்லது. இந்த வைரஸ் உடனடியாக மனிதர்களையும் தாக்க வல்லது.
குறித்த பறவைக் காச்சல் வைரஸ் தாக்கினால் இறப்பு நிச்சயம் என்ற நிலை உள்ளது. இதனால் குறித்த பண்ணையில் உள்ள 6,000 வாத்துகளையும் 13,000 ஆயிரம் முட்டைகளையும் பண்ணை உரிமையாளர் உடனடியாகவே அழித்துவிட்டார். இதற்கு சிறந்த வழி நெருப்பு மூட்டுவது தான். பிரிட்டனில் உள்ள சுமார் 33,000 பண்ணைகளை சோதனை செய்யுமாறு பிரித்தானியா அரசு உடனே கடும் உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே இன் நோய் எவ்வளவு தூரம் பிரித்தானியாவில் பரவியுள்ளது என்று தெரியவில்லை என்று கூறப்படுகிறது. எனவே கோழி மற்றும் வாத்துகளை உண்பவர்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டிய நிலை தோன்றியுள்ளது.
பறவைக் காச்சல் என்பது H5N8 என்னும் வைரஸ் தாக்கமே ஆகும். இது பறவைகளுக்கு முதலில் தொற்றி பின்னர் மனிதர்களுக்கும் தொற்றிக்கொள்கிறது.
 
http://www.athirvu.com/newsdetail/1465.html

No comments:

Post a Comment