அமெரிக்காவில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. பனிப்புயல் வீசுவதால், அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் தட்பவெப்பம் உறைநிலை அல்லது அதற்கும் கீழே சென்றுள்ளது.
ஆர்டிக் பிரதேசத்திலிருந்து வீசும் குளிர்காற்று, அமெரிக்காவை உறையச் செய்திருக்கிறது. ஹவாய் பகுதியில் ஜீரோ டிகிரி செல்சியஸ் தட்பவெப்பம் பதிவாகியுள்ளது. அங்கு மவுனா கியா எரிமலைப் பகுதியில் மைனஸ் 1 டிகிரி செல்சியஸ் தட்பவெப்பம் பதிவாகியுள்ளது. மில்வாகி பகுதியில் மைனஸ் 7 டிகிரி செல்சியஸ் தட்பவெப்பம் நிலவுகிறது.
காலை நேர தட்பவெப்பம் கடந்த 1976-ம் ஆண்டு நவம்பருக்குப் பிறகு மிகவும் குறைந்த தட்பவெப்பம் பதிவாகியிருப்பது தற்போதுதான். நியூயார்க்கின் மேற்குப் பகுதியில் 3 அடி முதல் 6 அடி உயரம் வரை பனிபடர்ந்துள்ளது. சில பகுதிகளில் பனியில் சிக்கி வாகனங்கள் நகர முடியாமல் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பனிப்புயல் வீசுவதால், 10 மாகாணங்களில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. பனிப்புயலில் இருந்து மக்களுக்கு உதவுவதற்காக தேசிய காவல் படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர். 225 கி.மீ. தொலைவுள்ள துர்வே நெடுஞ்சாலை மூடப்பட்டு, போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
வெதுவெதுப்பான நீர்நிலைகளின் மேல் குளிர்ந்த காற்று வீசும்போது ஏற்படும் ‘ஏரி தாக்கப்பனி’ (லேக் எபெக்ட் ஸ்னோ) கிரேட் லேக் பகுதியில் எழுந்துள்ளது. இதனால் அங்கு பனியால் ஆன பெரும் சுவர் நகர்வது போன்ற சூழல் ஏற்பட்டு, காற்றின்போக்கில் பெரும் பனிக்குவியல் உருவாகிவிடுகிறது. இதனால் பொதுமக்கள் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.USA-SENO
3