நூற்றுக்கணக்கான மாணவர்கள் பரீட்சைக்காக படித்துக்கொண்டிருந்த அதிகாலை 12.30 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. நூலக வாசலில் பொலிசார் சுட்டவரை எதிர்கொண்டுள்ளனர்.
ஆயுதத்தை கீழே போடும்படி பொலிசார் ஆணையிட்ட போது அவர்களை நோக்கி சுட முயன்ற போது பொலிசார் சுட்டதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. சுடப்பட்ட மாணவர்களின் விபரங்கள் மற்றும் சுட்ட நபரின் விபரங்கள் வெளியிடப்படவில்லை.
சுடப்பட்ட மாணவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மற்றய இருவரும் ஸ்திரமான நிலையில் உள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.
இப்பல்கலைக்கழகத்தில் 40,000-மாணவர்கள் வரை உள்ளனர் எனவும் விளையாட்டு மற்றும் கல்வித்துறைகளில் தேசிய ரீதியாக அறியப்பட்ட ஒரு பல்கலைக்கழகமாகவும் விளங்குகின்றது.
No comments:
Post a Comment