அடுத்த 3 மாதங்களுக்கு பிரித்தானியாவில் உள்ள தமிழர்கள் தயாராக இருப்பது நல்லது. இப்படி ஒரு கால நிலை கடந்த 30 வருடங்களில் வந்தது இல்லை என்று காலநிலை அவதானிகள் தெரிவித்துள்ளார்கள். அவர்கள் குறிப்பிடுவது குளிரை அல்ல. கடும் மழை மற்றும் காற்றைத்தான். இந்த வாரம் முதல் இனி 3 மாதங்களுக்கு (அதாவது பெப்ரவரி மாதம் வரை) கடும் மழையும் , புயல் காற்றும் வீசும் அபாயம் உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். பிரிட்டனில் உள்ள தாழ்வான இடங்களில் மழைவெள்ளம் தேங்கி நின்று, பெரும் பிரச்சனைகளை உருவாக்க உள்ளது. நீங்கள் வீதியில் உங்கள் கார்களில் செல்லும்போது, வெள்ளம் காணப்பட்டால் அதனை சாதாரணமாக எண்ணவேண்டாம். ஏன் எனில் நீங்கள் நினைப்பதை விட அது ஆளமாக இருக்கலாம்.
எனவே உங்கள் காரை அதனூடாக நீங்கள் ஓட்டிச் சென்றால் எஞ்சினில் தண்ணீர் புக வாய்ப்புகள் உள்ளது. அத்தோடு அடிக்கடி மழைபெய்யும் என்பதனால் எப்பொழுதும் குடையை வைத்திருப்பது நல்லது. இம்முறை குளிர் சற்று குறைவாக இருக்கும் எனவும், பெரும்பாலும் பனிப்பொழிவு இருக்காது என்று காலநிலை அவதானிப்பு மையம் தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் உள்ள தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகும் அபாயமும், மேலும் வீசும் கடும் காற்றால் கூரைகள் அல்லது, வீடுகளில் மேல் பகுதிகள் சேதமடைய வாய்ப்புகள் உள்ளது. இதனால் தகுந்த இன்சூரன்ஸ்(காப்புறுதிகளை) நீங்கள் எடுத்திருப்பது நல்லது. 2015ம் ஆண்டு பெப்பரவரி மாதமே இந்த மழை அடங்கும் என்று கூறுகிறார்கள்.
உலகம் வெப்பமடைதல் காரணமாகவே இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கருத்து வெளியிட்டுள்ளார்கள். பிரித்தானியாவில் பல ஆண்டுகளாக வசித்து வருபவர்கள், ஒரு விடையத்தை நன்றாக அவதானித்து இருப்பார்கள். அது என்னவென்றால் முன்னர் நவம்பர் மாதத்தில் எப்படி குளிருமோ அப்படி, இப்போது எல்லாம் குளிர் கிடையாது என்பது தான். இன்னும் சில ஆண்டுகளில் பிரித்தானியாவும் இலங்கை போன்று வெப்பம் அதிகம் உள்ள நாடாகா மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
No comments:
Post a Comment