Wednesday, October 1, 2014

பாடசாலை ஒன்றின் அருகில் இரு இளம் வாலிபர்கள் குத்தப்பட்டுள்ளனர்.


கனடா- ரொறொன்ரோ,ஸ்காபுரோ பாடசாலை ஒன்றிற்கு அருகில்இளம் வாலிபர்கள் இருவர் குத்தப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் புதன்கிழமை காலை எக்லிங்டன் அவெனியு கிழக்கில் மிட்லன்ட் அவெனியுவிற்கு சிறிது மேற்கில் காலை 9.30-ற்குச் சிறிது பின்னர் நடந்துள்ளது.
அவ்விடத்திற்கு வந்த அதிகாரிகள் 17 மற்றும் 15-வயதுடைய இரண்டு ஆண்கள் குத்து காயங்களுடன் அவதியுறுவதை கண்டுள்ளனர் என கான்ஸ்டபிள் ஜெனிவஜிட் சித்து தெரிவித்தார். ஒருவருக்கு மார்பில் குத்தப்பட்டும் மற்றவருக்கு கால் கை ஆகிய இடங்களில் குத்து காயங்கள் காணப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அருகில் இருப்பது Taber Park தொழிற்கல்வி பாடசாலை என தெரியவந்துள்ளது.
கடந்த வாரம் அல்பியன் வடக்கு கல்லூரியில் 19-வயதுடைய Hamid Aminzada மாணவன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட பின்னர் இச்சம்பவம் நடந்துள்ளது.
இருவரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். நிலைமைகள் பற்றிய விபரம் எதுவும் வெளியிடப்படவில்லை.
சந்தேகநபர் சம்பந்தப் பட்ட விபரங்கள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை.

- See more at: http://www.canadamirror.com/canada/32040.html#sthash.H518OWAo.dpuf

No comments:

Post a Comment