யுஎஸ்- வீடொன்று எரிந்து கொண்டிருக்க எரியும் வீட்டிற்குள் மனிதன் ஒருவர் அகப்பட்டு தவிப்பதை கருத்தில் கொள்ளாது  மக்கள் கூட்டம் வெளியில்  நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். அச்சமயம் அந்நியர் ஒருவர் தனது உயிரை பணயம் வைத்து வீட்டிற்கு நுழைந்து அகப்பட்டுக்கொண்டிருந்த மனிதனை காப்பாற்றிய சம்பவம் கலிபோர்னியாவில் நடந்துள்ளது.
வீடு மிகமோசமாக தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்க பெண் ஒருவர் வெளியில் நின்றபடி தனது தந்தை வீட்டிற்குள் அகப்பட்டு கொண்டுவிட்டதாக கதறினார். ஆனால் வெளியில் நின்ற அனைவரும் பெண்ணின் அலறலை சட்டை செய்யாது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
இச்சமயத்தில் Dodgers பேஸ்போல் தொப்பி அணிந்திருந்த மனிதன் ஒருவர் வீட்டினுள் சென்று ஒரு வயதான மனிதனை தனது தோளில் சுமந்து கொண்டு அமைதியாக வெளியே வந்தார். சுமந்து கொண்டு வந்த முதியவரை கீழே கிடத்திவிட்டு மறைந்து விட்டார்.
காப்பாற்றப்பட்டவர் 73-வயதுடைய றொபேர்ட் வால்ஸ் என்பவராவார். தன்னை காப்பாற்றிய நபர் யார் என்பது தனக்கு தெரியாதென அவர்   கூறினார்.
fire5 fire1fire3fire4fire2