Monday, September 1, 2014

கலியுகத்தில் இயற்கைக்கு எதிரான அனைத்தும் முன்னிடத்தில் இருந்து மக்களை பாவத்துக்குள் தள்ளும் என்பதன் உதாரணம்!

ஓரினச்சேர்க்கை ஆணுக்கு கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பு (ஓடியோ இணைப்பு)

அமெரிக்காவில் வீட்டிலிருந்து துரத்தி அடிக்கப்பட்ட ஓரினச்சேர்கை ஆணிற்கு 50,000 பவுண்ட்ஸ் நிதி வசூலாகியுள்ளது.
அமெரிக்காவின் ஜியார்ஜியா(Georgia) மாகாணத்தில் உள்ள கென்னிஸா நகரை சேர்ந்த டானியல் (Danial – age 20) என்ற நபர், தான் ஓரினச்சேர்க்கை ஆண் என்பதை தனது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்.
அப்போது இவரை வீட்டை விட்டு துரத்தியதோடு மட்டுமல்லாமல், அவருடன் சண்டை போட்ட உரையாடல்களை ஓடியோவாய் பதிவு செய்துள்ளார்.
இதனையடுத்து இந்த ஓடியோவினை அவர் இணையதளத்தில் வெளியிட்டபோது மக்களிடமிருந்து பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
இதனால் டானியலுக்கு இதுவரை 50,000 பவுண்ட்ஸ் நிதி வசூலாகியுள்ளது.
இந்த 5 நிமிட காணொளியில் எவரது முகமும் தெரியவில்லை என்றாலும், டானியல் மற்றும் அவரின் குடும்பத்தில் உள்ள பெண்மணி ஒருவர் உடன் ஏற்பட்ட விவாதம் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், அவரின் குடும்பத்தினரும் அவரை ஏற்றுக் கொள்ள ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இவர் திரட்டிய நிதியை ஆதரவற்ற ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு தானம் செய்ய போவதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment