Tuesday, July 1, 2014

கடல் கொந்தளிப்பு: வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை!

மன்னார், பொத்துவில் ஊடாக காலி வரையான கடற் பரப்பு கொந்தளிப்பாக காணப்படும் என வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
குறித்த பிரதேசங்களில் காற்று மணிக்கு 80 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
இதன் காரணமாக கடற் தொழிலில் ஈடுபடுபவர்கள், கரையோர பிரதேசங்களில் வசிப்பவர்கள் மற்றும் கடற்படையினர் காலநிலை குறித்து அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 24 மணித்தியாலத்துக்கு இந்த காலநிலை தொடரும் எனவும் நுவரெலியா, கேகாலை, கண்டி, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் இடையிடையே மழை பெய்யும் எனவும் வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

No comments:

Post a Comment