Monday, June 23, 2014

அமெரிக்க பொலிசார் நடந்துகொண்ட விதம் ! கள்ளமாக வீடியோ எடுத்து கலக்கும் நபர் யார் ?

அமெரிக்காவின் சிக்காகோ நகரில் நடைபெற்ற சம்பவம் ஒன்றை, அலேக்காக வீடியோ எடுத்து இன்ரர் நெட்டில் விட்ட நபர் யார் என்று தெரியவில்லை. ஆனால் குறித்த வீட்டியோ அமெரிக்காவில் பெரும் சர்சையை மட்டும் தோற்றுவித்துள்ளது. அமெரிக்க பொலிசார் நடந்துகொள்ளும் விதம் குறித்து இந்த வீட்டியோ பெரும் சர்சையை தோற்றுவித்துள்ளது. சிக்காகோ நகரில், சந்தேகத்தின் பேரில் ஒரு சாரதி மறிக்கப்படுகிறார். அவர் தொடர்பான அனைத்து விடையங்களையும் பொலிசார் தமது டேட்டா பேசில் சேர்ஜ் செய்து பார்கிறார்கள். அவர் குற்றம் ஒன்றும் இழைத்த நபர் அல்ல என்பது தெரிகிறது. இருப்பினும் 14 நாட்களுக்குள் அவர் தனது சாரதி அனுமதிப் பத்திரத்தை(லைசன்ஸ்) கொண்டு சென்று தமது ஊரில் உள்ள ஒரு பொலிஸ் நிலையத்தில் காட்ட வேண்டும் என்பதற்கான பற்று சீட்டை(டிக்கேட்டை) பொலிசார் கொடுக்க முற்படுகிறார்கள்.

பொலிசார் அந்த ரசீதை கொடுக்கும்வேளையில் அதனை மெதுவாக வாங்காமல் சற்று அவசரமாக அதனை வாங்கியதால், பொலிசாருக்கு கோபம் வந்துவிட்டது. ஏன் இப்படி ரசீதை பறிப்பது போல வாங்கினாய் என்று கூறி அன் நபரை சுவரோடு சாய்த்து உராசியுள்ளார்கள். அத்தோடு அவரை உடனே கைவிலங்கிட்டு , பொலிஸ் காரில் ஏற்றி கொண்டுசெல்கிறார்கள். அட கையில் தந்த ரசீதை அவசரமாக வாங்குவது ஒரு தப்பான செயலா ? எத்தனையோ தப்புகள் நடக்கிறது அதனை எல்லாம் விட்டு விட்டு, இதனை பெரிதாக ஏன் தூக்கிப்பிடிக்கவேண்டும் ? பொலிசார் இப்படியெல்லாமா நடந்துகொள்வார்கள் ? என்று இந்த வீட்டியோவைப் பார்த்த மக்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். போதாக்குறைக்கு அமெரிக்கா TV சேனல் ஒன்றும் இதனை ஒளிபரப்பி விட்டது. சம்பந்தப்பட்ட பொலிஸ் காண்ஸ்டபிளை விசாரிக்க வேண்டும், என்ற் கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. (இதோ வீடியோ இணைப்பு)
http://www.athirvu.com/newsdetail/221.html

No comments:

Post a Comment