Monday, June 23, 2014

பரிசை தட்டிச் சென்ற இளம் பெண்: தண்ணி அடிப்பதனால் தான் நான் குண்டாக இருந்தேன் என்கிறார் கட்டழகி !


டிரைன் செவரன் என்னும் 25 வயது பெண் தனது உடலை கட்டழகாக மாற்றி பரிசையும் தட்டிச் சென்றுள்ளார். சில வருடங்களுக்கு முன்னர் இவர் அதிக எடை கூடியவராக இருந்துள்ளார் சுமார் 65 கிலோகிராம் எடையுடையவராக இருந்த இப் பெண் தற்போது 50 KG தாஜ்மகாலாக மாறியுள்ளார். இதன் ரகசியம் தான் என்ன ? ஏன் பலரால் இப்படி செய்ய முடிவதில்லை என்ற கேள்வியும் எழுகிறது. குறித்த இந்தப் பெண் மதுவுக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. மதுவை அருந்தி அதன் பின்னர் உணவை உட்கொள்ளும் போது, அதிக அளவான கொழுப்பு சத்து உடலில் தங்கிவிடுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். பொதுவாக மது அருந்தும் பழக்கம் உடையவர்கள் ஆடு, மாடு, என்று பலான பலனான் உணவுகளை வறுவல் மற்றும் பொரியலாக உண்பது வழக்கம்.
இதன் காரணமாகவே அவர்கள் எடை அதிகரிக்கிறது. டிரைன் செவரன் என்னும் இப்பெண் முதல்வேலையாக மது அருந்துவதை நிறுத்திவிட்டார். இதன் பின்னர் அவர் தனது சாப்பாட்டில் முழு கவனத்தையும் செலுத்தி கொழுப்பு அதிகம் இல்லாத உணவுகளை உட்கொண்டு வந்தார். அத்தோடு தேகப் பயிற்சியிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இதன் காரணமாக அவரால் உடனே தனது எடையை குறைக்க முடிந்துள்ளது. அதுமட்டும் அல்ல, தனது உடலையும் கட்டழகாக மாற்றி பரிசு ஒன்றையும் தட்டிச் சென்றுள்ளார் என்றால் பாருங்களே.  


No comments:

Post a Comment