| இந்தியாவின் ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்த இளைஞன் இருதய செயலிழப்பு காரணமாகவே உயிரிழந்ததாக இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளனர். 26 வயதான திலீப் மாரு என்ற தனது சகோதரர் சிறுநீரக மோசடி காரணமாக கொழும்பில் உயிரிழந்ததாக அவரது சகோதரரான கணேஷ் ஹைதராபாத் மத்திய குற்ற விசாரணை பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார். எனினும் இந்த குற்றச்சாட்டை இலங்கை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண நிராகரித்துள்ளார். திலீப் மாருவின் இரு சிறுநீரகங்களும் சிறந்த முறையில் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து மருதானை பொலிஸார் விசாரணை மேற்கொண்டதாகவும், இளைஞனின் மரணத்திற்கு சிறுநீரக மோசடி காரணம் இல்லை எனவும் அஜித் ரோஹண கூறினார். எனினும் சிறுநீரக உதவி தேவை எனக் கோரி ஒரு குழு முகநூல் மற்றும் ஏனைய சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்துள்ளது. அதில் விருப்பம் தெரிவிப்பவர்களுக்கு இலங்கை செல்ல இலவச வசதி செய்து கொடுத்து இலங்கையில் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்யப்பட்டு வந்துள்ளதாக இந்திய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். |
| 20 Apr 2014http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1398016716&archive=&start_from=&ucat=1& |
Sunday, April 20, 2014
சிறுநீரக மோசடியல்ல இருதய செயலிழப்பே இந்திய இளைஞனின் மரணம்- பொலிஸார் (படம் இணைப்பு)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment