Sunday, April 6, 2014


தனது அக்காவின் கணவருடன் உறவு கொண்டு கர்ப்பம் தரித்த சிறுமி தனது கர்ப்பத்திற்கு தனது ஒன்று விட்ட அண்ணன் காரணம் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். யாழ். பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சிறுமியை அவர் பல மாதங்களாக வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார். அத்துடன் யாரிடமும் அது பற்றிக் கூறக் கூடாது என்று பயமுறுத்தியே வந்துள்ளார்.

குறித்த சிறுமி வயிற்றுக் குத்துக் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதே உண்மை வெளிவந்தது.

அதையடுத்து குறித்த நபர் சுகவீனம் என்று தெரிவித்து, வைத்தியசாலை ஒன்றில் தங்கிச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அதேவேளை, பருத்தித்துறையைச் சேர்ந்த குறித்த சந்தேகநபரின் தொடர்ச்சியான பயமுறுத்தல் காரணமாக சிறுமி முன்னர் பொய்யான வாக்குமூலம் வழங்கியதால், தவறுதலாக சிறுமியின் ஒன்று விட்ட சகோதரன் ஒருவரைப் பொலிஸார் கைது செய்திருந்தது.

அவரும் இதுவரை பொலிஸாரால் விடுவிக்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது

No comments:

Post a Comment