இன்று சந்திர கிரகணத்தை முன்னிட்டு இரவு ரத்த சிவப்பு நிறத்தில் நிலாவை பார்க்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த ரத்த சிவப்பு நிலா இந்தியாவில் தெரியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திர கிரகணம் வடக்கு மற்றும் தென் அமெரிக்கா, நியூசிலாந்து மற்றும் ஹவாய் தீவுகளில் நன்கு தெரியும். அமெரிக்காவின் கிழக்கு பகுதியில் மேகமூட்டம் சிவப்பு நிலாவை மறைக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
ஆனால் இன்று இரவு ஏற்படும் சந்திர கிரகணம் முழு சந்திர கிரகணம் ஆகும். அந்த சந்திர கிரகணம் ஏற்படும்போது நிலா சிவப்பு நிறத்தில் தெரியும். இன்று இரவு 1.58 மணிக்கு நிலாவின் நிறம் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிறம் மெல்ல மெல்ல 3.07 மணிக்கு நிலா சிவப்பு நிலாவாக காட்சியளிக்கும். இந்த சிவப்பு நிலா காட்சி அதிகாலை 4.24 மணி வரை நீடிக்கும். நிலா ரத்த சிவப்பு நிறமாக இரவு 3.45 மணிக்கு மிக தெளிவாகத் தெரியும். ஏப்ரல் 15, அக்டோபர் 8 மற்றும் அடுத்த ஆண்டு ஏப்ரல் 4 மற்றும் செப்டம்பர் 28 ஆகிய தேதிகளில் நிலா சிவப்பு நிலாவாக மாறும்.

No comments:
Post a Comment