Tuesday, April 8, 2014

வறுமையில் வாடும் குடும்பத்தின் அவலம் தீருமா? தமிழன் பாற்பானா? அல்லது மறப்பானா…

இன்று எமது மக்கள் படும் துயரம் வார்த்தைகளால் சொல்ல முடியாதவை அவர்கள் புலம்பெயர் மக்களிடம் கையேந்தவில்லை, பிச்சை கேட்கவில்லை, மாறாக நாங்கள் தான் அவர்களை வித்து கொண்டு இருக்கிறோம், எங்களில் சிலர் தமது சுய விளம்பரத்துக்காக உதவி செய்கிறேன் என்று சொல்லி அவர்களுடன் நின்று போட்டோ எடுத்து இணையத்தளங்களில் மற்றும் முகநூலில் போட்டும், வேறு சிலரோ அவர்களுக்கு ஆசை வார்த்தைகளை அள்ளி வீசிவிட்டு அவர்களின் தொலைபேசி அழைப்பைக்கூட எடுப்பதில்லை, வன்னிக்கு செல்பவர்கள் கூட வந்து சொல்வது ரோட்டு நல்லா போட்டுள்ளான், அங்கு எல்லாமே நல்லா உள்ளது என்று வன்னிக்கு செல்வோரே நீங்கள் ஏ 9 வீதியில் போகும் போது சொகுசு வண்டியில் இருந்துகொண்டு கறுப்பு கண்ணாடிஊடாக பார்த்தால் எதுவும் தெரியாது ,வண்டியை விட்டு இறங்கி சில தூரங்கள் உள்ளே வந்து பாருங்கள் எமது நிலமை புரியும் எவ்வளவு வலிகளை சுமந்துகொண்டு வாழ்கிறோம் என்று தெரியும்.

உங்கள் களைப்பை போக்க சினிமா பாடல்கள் உங்கள் செவிகளை இதமாக்கும் ,எங்கள் செவிகளில் இராணுவ சப்பாத்து(காலடி) ஓசைகளும் வலிகளில் முனகும் எமது சொந்தங்களின் அலறல்களுமே தினமும் கேட்கிறது, தானாக எதுவும் செய்ய முடியாது கண் கை கால்கள் போன்ற உறுப்புகளை இழந்து அவதியுறும் முன்னால் தளபதிகள் போராளிகள் பொதுமக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று ஒருமுறை உதவி செய்யாவிட்டாலும் பரவாய் இல்லை வந்து பார்த்துவிட்டு போங்கள், களத்தில் விழுப்புண் அடைந்து ஒரே படுக்கையாய் கிடந்து படுக்கை புண்னால் அவதியுறும் உறவுகளிடம் ஒரு ஆறுதல் வார்த்தையாவது பேசுங்கள், நீங்களும் உங்கள் குழந்தைகள் குட்டிகள் நல்லா சுதந்திரமாக வாழவேண்டி தங்களை அர்ப்பணித்தவர்கள் இவர்கள், நீங்கள் உதவி செய்ய விரும்பினால் ஏன் விளம்பரம் செய்யவேண்டும், உண்மையாக நாட்டுக்காக போராடியவன் சிரமப்படுகிறான்,அவனை வைத்து பிழைப்பு நடத்துகிறவன் நல்லாயிருக்கிறான்.
தங்களை கவிஞர் என்றும் எழுத்தாளர் என்றும் சொல்லிக்கொள்வோரே ,நிலாவை பற்றி பக்கம் பக்கமாகவும் பெண்ணை பற்றி வர்ணித்து எவளவோ கற்பனைகளை எழுதும் உங்களால், இவர்களை பற்றிய உண்மையை ஒருமுறை கூட எழுதமுடியாமல் போனது ஏனோ? தமது சுய விளம்பரத்துக்காக புலிகளை புகழ்ந்து எழுதிக்கொண்டு நரிகளாக வாழாமல் மனிதர்களாக வாழ பழகுங்கள், அன்பான உறவுகளே புலம் பெயர் தேசத்தில் ஒரு சிலர் மக்களிடம் காயப்பட்ட போராளிகளுக்கு என்று சேர்த்த பணம் அவர்களுக்கு கொடுக்கவில்லை, எம்மிடம் தகுந்த ஆதாரம் உண்டு, சில பாதுகாப்பு காரணங்களுக்காக (அங்கு உள்ளவர்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு) இப்பொழுது வெளியிட முடியாதுள்ளது,இந்த நிலமை மாற்றப்பட வேண்டும் மக்களே நீங்களே நேரடியாக உதவுங்கள் – நீங்கள் எதை இழந்தீா்கள் என்பதல்ல, உங்களிடம் என்ன மிச்சமிருக்கின்றது என்பதுதான் முக்கியம். – அது இதுதான் …
வாழ்பவா்களுக்கு உதவி செய்யுங்கள் இறந்தவா்களுக்கு நம்பிக்கை தாருங்கள் இறந்தவா்களுக்குத் துக்கம் நாள் எடுக்க உண்மையான வழி அவா்களுக்கு சொந்தமானவா்களைப் பாதுகாப்பதாகும்.Tamil-LifeTamil-Life02Tamil-Life01
வித்தகன்
http://www.jvpnews.com/srilanka/64996.html

No comments:

Post a Comment