Sunday, April 13, 2014

வெண்ணிற ஆடை நிர்மலா.


வெண்ணிற ஆடை நிர்மலா. இயற்பெயர் A. B.சாந்தி. மலையாளத் திரைப்படங்களில் இவரது பெயர் உஷாநந்தினி. ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை திரைப்படத்தில் 1965 ஆம் ஆண்டு இவர் அறிமுகம் ஆனார். தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளப்படங்கள் பலவற்றில் கதாநாயகியாக நடித்தவர். பின்னாளில் நல்ல குணச்சித்திரப்பாத்திரங்களிலும் நகைச்சுவை வேடங்களிலும் நடித்தவர், நடித்துவருபவர். பல தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். நாட்டியப்பள்ளியும் நடாத்திவருகிறார்.வெண்ணிற ஆடை 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெயலலிதா, ஸ்ரீகாந்த், நிர்மலா, மூர்த்தி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
இப்படத்தில் முதலில் தோன்றியதால் நிர்மலா வெண்ணிற ஆடை நிர்மலா என்றும் மூர்த்தி வெண்ணிற ஆடை மூர்த்தி என்றும் அறியப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment