Saturday, April 12, 2014

ஜய வருஷ ராசி பலன்கள் 2014 - 2015






மங்களகரமான ஜய வருஷப் பிறப்பின் பலன்களை வாசகர்களுக்காக....
பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் கணித்து எழுதியுள்ளார். அவரது விரிவான ஜோதிட பலன்களை இங்கே காணலாம்.

மங்களகரமான ஜய வருஷம், உத்தராயனம் வருஷரிது சித்திரை மாதம் 1ம் தேதி(14-04-2014) திங்கட்கிழமையும், சுக்லபக்ஷ சதுர்த்தசியும், ஹஸ்தம் நக்ஷத்ரமும், வியாகாத நாம யோகமும் வணஜீ நாம கரணமும், கன்னியா இராசியும் சந்திர ஹோரையும் மேஷ அம்சையும், சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி காலை மணி 6.05க்கு இராஜஸ மேஷ லக்னத்தில் ஜய வருஷம் ஜெனனம்.

ஜய வருஷ வெண்பா:

ஜய வருடதன்னிலே செய் புவனங்கள் எல்லாம்
வியனுரவே பைங்கூழ் விளையும் - நயமுடனே
அக்கம் பெரிதா மளவில் சுகம் பெருகும்
வெக்குவார் மன்னரிறை மேல்.

ஜய வருஷ ராசிக்கட்டம்


இந்த ஆண்டு ஏற்படும் முக்கிய கிரக பெயர்ச்சிகள்:

கேது மேஷ ராசியிலும், குரு மிதுன ராசியில் வக்ரமாகவும், சனி - ராகு துலாமிலும் இருக்கிறார்கள்.

சனி 21-07-2014 அன்று வக்ர நிவர்த்தியாகிறார்.

குருபகவான் 13-06-2014 அன்று கடக ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

21-06-2014 அன்று ராகு பகவான் கன்னிக்கும், கேது மீனத்திற்கும் பெயர்ச்சியாகிறார்கள்.

சனீஸ்வர பகவான் 17-12-2014 அன்று பெயர்ச்சியாகி விருச்சிக ராசிக்கு செல்கிறார்.

இதனால் ஏற்படும் லோக பலன்கள்:

நல்ல மழையும் பசுமையும் உண்டாகும். விவசாயம் கால்நடை வளர்ச்சி பெறும். இதர துறைகளிலும் நாடு வளர்ச்சி பாதயை நோக்கி முன்னேறும். குரு உச்சஸ்தானத்தில் அமர்வதால் நாட்டையும் வீட்டையும் பலவிதங்களில் தொல்லைப்படுத்தும் சமூக சீர்கேட்டாளார்கள் அழிக்கப்படுவர். ரியல் எஸ்டேட் துறையில் மிக அசுர வளர்ச்சி ஏற்படும். மக்களிடம் தட்டுப்பாடு நீங்கி அதிக அளவில் பணப்புழக்கம் ஏற்படும்.

பொன் பொருள் விலை மிகவும் அதிகரிக்கும். பொருளாதாரம் நிலையில் புதிய மாற்றம் ஏற்படும். ஆலயங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். அடிக்கடி முக்கிய கடல்களில் நீர்மட்டங்களில் மாற்றம் இருந்து கொண்டே இருக்கும். அதனால் முக்கிய துறைமுகங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படலாம். முக்கிய தேவாலயங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் சமாதானம் ஏற்படும். இவ்வாண்டு நடைபெறும் அலகாபாத் கும்பமேளா சிறப்பான முறையில் நடந்தாலும் விபத்துகள் ஏற்பட வாய்ப்புண்டு.

புண்ணிய க்ஷேத்திரங்களில் விபத்துகள் ஏற்படலாம். மலைவாசஸ்தலங்களில் பனிமூட்டம் அதிகமாக இருக்கும். நிலச்சரிவுகள் ஏற்படலாம். அரசாங்கத்திற்கு எதிராக கடத்தல்கள் அதிகரிக்கும். ஆனால் அரசாங்கம் அவற்றை பரிமுதல்களும் செய்யலாம். புதன்கிழமைகளில் நல்ல காரியங்களை ஆரம்பிப்பதும் செய்வதும் நன்மையைத் தரும்.

இந்தோனேஷியா, பர்மா, சுமத்ரா, கரீபியன் தீவுகள், கொரியா, ஆஸ்திரேலியா, வட அமேரிக்கா போன்ற  இடங்களில் இயற்கை சீற்ற பாதிப்புகள் ஏற்படலாம். வளைகுடா நாடுகள் மற்றும் ஆப்பிரிக்கா தேசங்களில் கலவரங்கள் ஏற்பட்டு மறையும். சனியுடன் ராகு இணைந்தும் குரு கேந்திரமும் ஏற்படுவதால் அரசில் குழப்ப நிலைமையும் பல புதிய மாற்றம் ஏற்படுதலும் நிகழும். சாதாரண மக்களையும் செல்வந்தனாக்கிவிடும்.

நாட்டில் பல இடங்களில் தெய்வகாரியம், பூஜைகள் விசேஷமாக நடக்கும். தொழில்துறையில் தமிழ்நாடு செழித்து வளரும். அரசாங்கத்திற்கு தலைவலியாக இருந்த பிரச்னைகள் அனைத்தும் அடங்கிவிடும். காவல்துறை மேலும் வலிமையும் முன்னேற்றமும் வசதிகளும் பெற்று நல்ல புகழ் அடையும்.

உயர்பதவிகளில் இருக்கும் பெண்களுக்கு இது யோகமான நேரம்.  உலகில் பல நாடுகள் மழை வெள்ளத்தால் பாதிப்பு அடையும். இயற்கை சீற்றம் – பூகம்ப பாதிப்பு ஏற்படும். பல நாடுகளில் புரட்சி வெடிக்கலாம். மேலை நாடுகளில் உள்ள தலைவர்களுக்கு தலைவலியான நேரம். தேவை இல்லாமல் சண்டை சச்சரவு வரலாம். தீவிரவாதத்தால் பிரச்னைகள் வந்தாலும் அடங்கிவிடும். தங்கம் விலை மேலும் அதிரடியாக உயரும்...

பன்னிரு ராசிகளுக்குமான விரிவான பலன்கள் பகுதிகளாகத் தொடர்ந்து இங்கு வெளியாகும். உரிய இராசிகளின் பெயர்கள் மீது அழுத்திப் பலன்களைக் காண்க...

மேடம்

மிதுனம்

கடகம்

ரிஷபம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம் 

கும்பம்

மீனம்
- See more at: http://www.vannionline.com/2014/04/2014-2015_9.html#sthash.oXycttA9.dpuf

  பதிந்தவர்: தம்பியன் 12 APRIL 2014


மேடம்: அசுபதி, பரணி, கார்த்திகை-1ம் பாதம் மற்றும் சு, சொ, சோ, சை, ல, லீ, லு, லோ, அ, ஆ ஆகிய எழுத்துக்களை முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்கள்.

தைரியமும் தன்னம்பிக்கையும் ஆர்வமுடன் லட்சிய நோக்குடன் தக்க விதத்தில் செயலாற்றி வாழ்க்கையில் சாதனைகள் புரியும்  மேஷ ராசி அன்பர்களே. நீங்கள் நவக்கிரகங்களில் தைரியக்காரகன் என்று போற்றப்படும் செவ்வாயை ஆட்சி நாயகனாக கொண்டவர்கள்.  அற்ப ஆசைக்கு இடம்கொடுக்காதவர்கள். ஆனால் சற்று முன்கோபக்காரர்கள். வாக்குவன்மை நிறைந்தவர்கள்.

கிரகநிலை: இந்த புத்தாண்டில் உங்கள் ராசியில் கேதுவும், ராசிக்கு  7ம் இடத்தில் சனியுடன் ராகுவும் இருக்கிறார்கள். 13-06-2014 அன்று உங்கள் சுகஸ்தானத்திற்கும் பெயர்ச்சியாகிறார். சனி 21-07-2014 அன்று வக்ர நிவர்த்தி ஆகிறார். 21-06-2014 அன்று ராகு பகவான் ரண ருண ரோகஸ்தான கன்னிக்கும், கேது விரையஸ்தான மீனத்திற்கும்  பெயர்ச்சியாகிறார்கள். சனீஸ்வர பகவான் 17-12-2014 அன்று பெயர்ச்சியாகி அஷ்டம ஸ்தான விருச்சிக ராசிக்கு செல்கிறார்.

பொதுவாக  மூன்றாம் இடத்தில் குரு  இருக்கும் போது  குடும்பத்தில் பல்வேறு பிரச்சினையைஉருவாக்குவார். அலைச்சல் அதிகரிக்கும் வெளியூர் வாசம் நிகழும்.  தீயோர் சேர்க்கையால் அவதிகள் நேரிடலாம். இதைக் கண்டு அஞ்ச வேண்டாம். குரு இருக்கும் இடம் சாதகமாக இல்லாவிட்டாலும், குருவின் அனைத்துப் பார்வைகளும் சாதமாக அமையும். அதன்மூலமும் நன்மை கிடைக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும்.

அக்கம்பக்கத்தாரிடமும் வீண் பேச்சை தவிர்க்கவும். சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போக வாய்ப்பு உண்டு. விருந்து விழா என்று சென்று வருவீர்கள். தடைபட்ட திருமணம் கைகூடும். குடும்பத்தில் சிற்சில பிணக்குகள் வரலாம் புதிய வீடு கட்ட வாய்ப்பு உண்டு. குடும்ப பெரியோர்களின் ஆலோசனையை கேட்டு நடப்பதுநல்லது.இளைய சகோதர சகோதரிகளின் மூலம் மிகுந்த நன்மைகள் கிடைக்கும். பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். நன்மைகள் தொடர்ந்த வண்ணம் இருக்கும்.

பணப் பிரச்சனைகளில் உங்களை திக்குமுக்காட வைத்தாலும் அவ்வப்போது பணவரவிற்கு குறையிருக்காது. குடும்பச் செலவுகளை எப்படியும் சமாளிக்க வாழ்க்கைத்துணை உதவுவார். பூர்வீக பிதுரார்ஜித சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் முடிவிற்கு வரும். ஜீவனம் சம்பந்தமான விஷயங்களில் காரியம், நேரம் நஷ்டம் ஆனாலும் அதை தாங்குவதற்குண்டான் வலுவை குரு உங்களுக்கு அளித்திடுவார். வளமும் வசதியும் அதிகரிக்கும். தம்பதியினர் இடையே அன்பு மேம்படும்.

உறவினர்கள் வகையில் இருந்துவந்த பிரச்சினை இருக்காது. பொருளாதாரத்தில் வளர்ச்சியை காணலாம். சிலர் புதிய சொத்துக்கள் வாங்கலாம். புதிய வாகனங்கள் வாங்கலாம். உடல்நலனை பொறுத்தவரை சுமாராக இருக்கும். வழக்கு விவகாரங்கள் சிறப்பாக இருக்கும்.  நீண்ட நாட்களாக இருந்து வந்த தேக்க நிலை மறையும். திட்டமிட்ட பணிகள் அனைத்தும் தொய்வின்றி நடக்கும். ஏற்கனவே செய்த தவற்களை திருத்திக் கொள்ள பார்ப்பீர்கள். நல்வழி காட்ட நல்லவர்கள் வருவார்கள்.

கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த குறைகள் அனைத்தும் நிவர்த்தியாகும். கடன் வாங்க வேண்டி வந்தாலும் அனைத்தையும் திருப்பி அடைப்பதற்குண்டான வழிகளை குரு உங்களுக்குக் காண்பிப்பார். நஷ்டம் ஏற்படும் என நினைத்திருந்த மனக்கவலைகள் அனைத்தும் தீரும். உத்தியோகத்தில் வழக்கமான பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. வேலை பளு குறையும்.சிலர் இழந்த பதவியை மீண்டும் கிடைக்க பெறுவர். இடமாற்ற பீதி மறையும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு.

சிலர் தொய்வு நிலையில் இருந்து விடுபடுவர். வெளியூர் பயணம் அனுகூலத்தை கொடுக்கும். வேலையில் சிலருக்கு வெறுப்பு வரலாம், எனவே மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். உடன் இருந்து தொல்லை கொடுத்தவர்கள் விலகுவர். வெற்றி பெறும் பட்டியலில் உங்கள் பெயரும் இடம் பெறப் போகிறது.

வியாபாரிகள் வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். குறைந்த முதலீட்டில் புதிய வியாபாரம் தொடங்கலாம்.  உங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். கலைஞர்கள் திருப்திகரமான பலனை எதிர்பார்க்கலாம். அலைச்சலும், பளுவும் இருக்கத்தான் செய்யும். அரசு உதவி கிடைக்கும். உடன் பணிபுரிவோரால் பாராட்டும், அங்கீகாரமும் கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சீரான பலனை காண்பர். பதவிகள் வந்து சேரும். 

மாணவர்கள் விடாமுயற்சியுடன் படிப்பது நல்லது. விவசாயம் சாதாரணமாக நடக்கும். அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.  தொடர்ந்து நற்பலனை பெறலாம். கெட்ட சகவாசத்தில் சற்று எச்சரிக்கை தேவை. அதிகமாக சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். முன்னேற்றத்திற்கு வழி காண்பீர்கள். மேற்படிப்பில் எதிர்பார்த்திருந்த துறை கிடைக்கும்.  விவசாயம் சிறப்பாக நடக்கும். ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் புதிய நிலம் வாங்கலாம்.

பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிய நண்பர்களிடம் சேரும் முன் எச்சரிக்கை தேவை. நினைக்கின்ற காரியங்களனைத்தும் சுணக்கமின்றி நடைபெறும். போட்டி பொறாமை எதிர்ப்புகளை சிறப்பாக சமாளித்து விடுவீர்கள்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை தோறும் முருகன் கோயிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றவும். முடிந்தவரை ராகு கேது ஸ்தலங்களுக்குச் சென்று பரிகாரம் செய்து வரவும்.

அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடக்கு

செல்ல வேண்டிய தலம்: திருச்செந்தூர், ஆலங்குடி, மதுரை, ராமேஸ்வரம்

அதிர்ஷ்ட கல்: புஷ்பராகம், பவழம்

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட தெய்வம்: ஸ்ரீமுருகன், ஸ்ரீகுரு

இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.
ரிஷபம்: கார்த்திகை- 2, 3, 4ம் பாதம், ரோகினி, மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள் மற்றும் இ, உ, எ,ஏ, ஒ, வா, வ, வி, ஆ, லோ ஆகிய எழுத்துக்களை முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்கள்.

கவர்ச்சிகரமான தோற்றமும் உள்ளப் பொலிவும் கனிவான பேச்சும் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே. நீங்கள் நவக்கிரகங்களில் அள்ளிக் கொடுக்கும் வல்லமை கொண்டவர்  என்று போற்றப்படும் சுக்ரனை ஆட்சி நாயகனாக கொண்டவர்கள்.  இனிமையாக பேச வேண்டும் எனற எண்ணம் கொண்டவர்கள். ஆடம்பரமாகவும் அதே வேளையில் அவசியத்தேவைகளுடனுடம் வாழ வேண்டும் என்ற கருத்து உடையவர்கள்.

கிரகநிலை: இந்த தமிழ் புத்தாண்டில் உங்கள் ரண ருண ரோக ஸ்தான ராசியில் சனி ராகுவும், ராசிக்கு  விரையஸ்தான 12ம் இடத்தில் கேதுவும் இருக்கிறார்கள். தனஸ்தானத்தில் அஷ்டம லாபாதிபதி  குரு உங்கள் தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு பெயர்ச்சியாகிறார். ஆறாம் ஸ்தானத்தில் சனி 21-07-2014 அன்று வக்ர நிவர்த்தி ஆகிறார். 21-06-2014 அன்று ராகு பகவான் பஞ்சமஸ்தான கன்னிக்கும், கேது லாப ஸ்தான  மீனத்திற்கும் பெயர்ச்சியாகிறார்கள். பாக்கிய கர்மாதிபதி சனீஸ்வர பகவான் 17-12-2014 அன்று பெயர்ச்சியாகி ஆறாம் ஸ்தானத்திலிருந்து களத்திர ராசி  விருச்சிகத்திற்கு செல்கிறார்.

பணவரவு புதிய இனங்களில் வந்துசேரும். மற்றவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். தம்பி, தங்கை உங்கள் கருத்துக்கு மதிப்பளிப்பர். வீடு, வாகனத்தில், நிலம் ஆகியவற்றில் தேவையான நவீன மாற்றம் செய்வீர்கள். புதிய வீடு வாங்குவதற்கும் யோகமுண்டு. குழந்தைகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள். அவர்கள் மீதான பாசமும் அதிகரிக்கும். பூர்வசொத்தில் வருமானம் அதிகரிக்கும். தம்பதியர் ஒருவருக்கொருவர் பாசத்துடன் நடந்து குடும்பத்தில் மகிழ்ச்சியை நிலைநாட்டுவர்.

நண்பர்களால் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். ஆயுள் ஸ்தானத்தில் குரு பார்வை பதிவதால் உடல்பலம் கூடும். தொல்லை கொடுத்து வந்த வியாதிகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். தந்தைவழி உறவினர்களிடம் இருந்து வந்த பகையுணர்வு நீங்குவதோடு உதவியும் கிடைக்கும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமண முயற்சி எளிதில் நிறைவேறும். திட்டமிட்டபடி மங்கல நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும். 

வியாபாரிகள் தங்கள் தொழிலில் அமோக வளர்ச்சியும் தாராள லாபமும் பெறுவர். தொழிலதிபர்களும் விறுவிறுப்புடன் செயல்பட்டு நல்ல முன்னேற்றம் காண்பர். புதிய கிளை துவங்கும் திட்டம் வெற்றிகரமாக நிறைவேறும்.  தனவரவு பெருகும். லட்சியங்கள் நிறைவேறும். பேரும் புகழும் கிடைக்கும். வளமான வாழ்க்கை பொற்காலமாக இருக்கும். அற்புதமான திருப்பங்கள் அவ்வப்போது நிகழும். கடல்சார் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் வியாபாரம் செய்பவர்கள் வாடிக்கையாளர்களின் ஆதரவால் அதிக லாபம் காண்பர். மற்ற வியாபாரிகளுக்கு விற்பனை கூடுவதுடன் அடிக்கடி வெளியூர் சென்று ஆதாயத்துடன் திரும்புவர்.

  உத்தியோகஸ்தர்கள் அதிலும் அரசு துறையில் பணிபுரிபவர்கள் சிறப்பாக செயல்பட்டு பணிகளைக் குறித்த காலத்தில் முடிப்பர். பதவி உயர்வு, விரும்பிய பணி, இடமாற்றம் கிடைக்கும். தனியார் துறையில் பணிபுரிபவர்கள் நிர்வாகத்திடம் நன்மதிப்பைப் பெறுவர். எதிர்பார்த்த சலுகை அனைத்தும் கிடைக்கும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.  பணிபுரியும் பெண்கள் ஆர்வமுடன் கடமையாற்றி குறித்த காலத்தில் பணிகளைச் செய்து முடிப்பர். சம்பள உயர்வு, பதவி உயர்வு ஆகிய சலுகை பெறுவர். எதிர்பார்த்த கடனுதவி தேவையான சந்தர்ப்பத்தில் கிடைக்கும்.

குடும்ப பெண்கள் கணவரின் அன்பைப் பெறுவர். குடும்பத்தேவைக்கான பணவசதி கிடைத்து சந்தோஷ வாழ்வு நடத்துவர். உறவினர்களில் மத்தியில் அந்தஸ்து கூடும். மாணவர்கள் திட்டமிட்டுப் படித்து தரத்தேர்ச்சி காண்பர். மற்ற துறை மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். படிப்புக்கான பணவசதி சீராக கிடைத்து வரும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆரம்ப, மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அதிகநேரம் ஒதுக்கி அக்கறையுடன் படிப்பர். படிப்பு முடித்தவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு இந்த வருடம் ஒரு பொன்னான காலமாகும். பட்ட கஷ்டத்திற்கு அறுவடை செய்யும் காலம் வந்து விட்டது. செய்யாத தப்பிற்கெல்லாம் மாட்டி அவதிப்பட்டீர்களே அந்த நிலைமை மாறும். உங்கள் பேச்சிற்கும் அடையாளம் கிடைக்கும் காலமிது. சிறிய சிறிய செலவுகள் வந்து பயமுறுத்தியதே அந்த நிலைகளிலும் முன்னேற்றம் இருக்கும். தாய் தாய் வழி உறவினர்கள் மீது உங்களுக்கு நல்ல அபிப்ராயங்கள் எழும். பிள்ளைகள் மீது கவனம் தேவை. அவர்களிடம் அளவுக்கு அதிகமாக எதிர்பார்க்காதீர்கள்.

நீர் சம்பந்தப்பட்ட வியாதிகள் வரலாம். தண்ணீரை காய்ச்சிக் குடிக்க பழகுங்கள். அலர்ஜியும் வரலாம். கவனம். வாழ்க்கைத்துணையுடன் தூரதேச பிரயாணங்கள் செய்யும் சூழ்நிலைகள் வரலாம். நண்பர்கள், உறவினர்களிடம் கவனம் தேவை. நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் என்றே தெரியாமல் நீங்கள் பழக வேண்டி வரலாம். தொழில் செய்யும் இடத்தில் இடமாற்றம், பணி பளு வரலாம். எதிர்கொள்ள தயாராகுங்கள். மிகுந்த சாமர்த்தியசாலியான நீங்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்குவீர்கள்.

அரசியல்வாதிகள் மற்றும் சமூக நல சேவகர்கள் அனைவரிடமும் இன்முகத்துடன் நடந்து கொள்வர். சமூகநலனில் அக்கறையுடன் ஈடுபட்டு மக்கள் செல்வாக்கு காண்பர். தாராள செலவில்தொண்டர்கள் மத்தியில் சுய அந்தஸ்தை உயர்த்துவர். நீண்டநாள் எதிர்பார்த்த பதவி, பொறுப்பு தலைமையின் ஆதரவால் கிடைக்கப் பெறுவர்.  

பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் பெருமாள் கோவிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றவும். முடிந்தவரை வெண் மொச்சை சுண்டல் செய்து வழங்கவும்.

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு

செல்ல வேண்டிய தலம்: திருப்பதி, கஞ்சனூர் மற்றும் ஸ்ரீரங்கம்

அதிர்ஷ்ட கல்: வைரம், வைடூரியம்

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு

அதிர்ஷ்ட தெய்வம்: ஸ்ரீபெருமாள், ஸ்ரீதாயார்

இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.



மிதுனம்: மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்  மற்றும் கா, கி, கு, கூ, க, ச, சே, கோ, கை, ஹை ஆகிய எழுத்துக்களை முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்கள்.

நன்றாக சிந்தித்து செயல்பட்டு வேலையை செவ்வனே முடிக்கும் மிதுன ராசி அன்பர்களே. நீங்கள் நவக்கிரகங்களில் ஞானத்தை வாரி வழங்கும் புதனை ஆட்சி நாயகனாக கொண்டவர்கள்.  மற்றவர் மனம் நோகாமல் சாமர்த்தியமாக பேசும் ஆற்றல் உடையவர்கள்.

கிரகநிலை: இந்த தமிழ்ப் புத்தாண்டில் உங்கள் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தான ராசியில் சனி ராகுவும், ராசிக்கு  லாபஸ்தான 11ம் இடத்தில் கேதுவும் இருக்கிறார்கள். ராசியிலிருந்து   குரு 13-06-2014 அன்று உங்கள் தனவாக்கு ஸ்தானத்திற்கு பெயர்ச்சியாகிறார். பஞ்சம பூர்வ ஸ்தானத்தில் சனி 21-07-2014 அன்று வக்ர நிவர்த்தி ஆகிறார். 21-06-2014 அன்று ராகு பகவான் சுகஸ்தான கன்னிக்கும், கேது தொழில் ஸ்தான  மீனத்திற்கும் பெயர்ச்சியாகிறார்கள்.  அஷ்டம பாக்கியாதிபதி சனீஸ்வர பகவான் 17-12-2014 அன்று பெயர்ச்சியாகி ஐந்தாம் இடத்திலிருந்து ஆறாம் ராசி  விருச்சிகத்திற்கு செல்கிறார்.

மனக்குழப்பமும், செயல் தடுமாற்றமும் அவ்வப்போது தலைதூக்கும். குருவின் பார்வை பதியும் ராசிகளின் வழியாக உங்கள் நற்பலன் கிடைக்கும். குடும்பத்தில் பணத்தேவை அதிகரிக்கும். கையிருப்பு கரைவதோடு கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். வீடு, வாகன வகையில் பராமரிப்புச் செலவு கூடும். வாகன பயணத்தில் மிதவேகத்தைப் பின்பற்றுவது அவசியம். புத்திரர் உங்களின் சிரமத்தை அறிந்து உதவி செய்ய முன்வருவர். அவர்களின் ஒத்துழைப்பு கண்டு பெருமிதம் கொள்வீர்கள்.கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை காண்பர். பூர்வசொத்தில் கிடைக்கும் வருமானம் முக்கிய தேவைகளை நிறைவேற்ற உதவும். 

உடல்நலனில் அக்கறை தேவை. அலைச்சல் காரணமாக சோர்வு அடிக்கடி உண்டாகும். சத்தான உணவு, முறையான ஓய்வு அவசியம். மருத்துவச் செலவும் ஏற்பட வாய்ப்புண்டு. சிலருக்கு சொத்தின் பேரில் கடன் பெறவும், சொத்துக்களை விற்கவும் நிர்ப்பந்தமான சூழ்நிலை உருவாகும். பிறர் பொருளை பாதுகாப்பது, ஜாமின் கொடுப்பது போன்ற விஷயங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழில் சார்ந்த வகையில் தடைகளை எதிர்த்து போராட நேரிடும். எதிலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுவது நல்லது.

சிலருக்கு விரும்பாத வீடு, பணி இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. தடைபட்டிருந்த திருமணம், தடை பட்டிருந்த கல்வி, என தடையாக இருந்த அனைத்து காரியங்களும் தடைகள் விலகி ஒன்றன் பின் ஒன்றாக சிறப்பாக நடக்கும். அனைத்திலும் விரையம், எந்த பரிகாரம் செய்தாலும் எந்த நல்லதும் நடக்கவில்லை என அங்கலாய்ப்பவர்களுக்கும் நல்ல காலம் பிறந்து விட்டது. கடுஞ்சொற்களை பேசுவதில் வல்லவரான நீங்கள் சற்று அதைக் குறைத்து கொள்ளுங்கள். உங்கள் மதிப்பு உயரும். அவ்வப்போது வீட்டில் உள்ளவர்களையும் நினைத்து பாருங்கள். நண்பர்கள் தேவைதான்.

தைரியத்தை மற்றவருக்கும் ஊட்டுவீர்கள், ஆனால் உங்கள் அடிமனதில் சின்ன பயம் இருக்கும். இனி அந்த பயம் வேண்டாம். படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனம் தேவை. மற்றவருக்கு சொல்லி சொல்லி கொடுப்பது இருக்கட்டும். முதலில் நீங்கள் நன்று படியுங்கள். வீடு வாகனம் யோகம் சிறப்பாக அமையும். தாய் தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த கசப்பு நீங்கும். பிள்ளைகள் இல்லாதவர்கள் பாக்கியம் கிட்டும். பிள்ளைகள் உங்கள் மேல் பாசமாக இருப்பர். ஆனாலும் நீங்கள் அவர்கள் மேல் சின்ன சின்ன பயங்களை கொண்டிருக்கீறீர்கள். அவர்கள் மனசாட்சிக்கு பயப்படுகிறவர்கள்.

உஷ்ணம் சம்பந்தப்பட்ட வியாதிகள் வரலாம். கவனம். வாழ்க்கைத்துணையுடன் உரசல்கள் எழலாம். விட்டு கொடுத்து, அனுசரித்து போங்கள். வாகனங்களை கையாளும்போது கவனம் தேவை. வேகம் கூடவே க்ஊடாது. ஒரு இடத்திற்கு கிளம்பும் முன் சீக்கிரம் கிளம்புங்கள். எந்நேரமும் டென்ஷணாகவே இருக்காதீர்கள். தந்தையாருடன் உறவு பிரகாசிக்கும். வேலை செய்யும் இடத்தினில் நல்ல பெயர் கிடைக்கும். சிலருக்கு அவார்டுகள் கிடைக்கலாம். எங்கு முதலீடு செய்வது என்பதனை தகுந்த ஆலோசகரிடம் ஆலோசனை பெற்று செய்யுங்கள். நீங்களாகவே எதிலும் முயற்சி செய்து பார்த்தல் கூடாது.

வியாபாரிகள்  லாபத்தை தக்கவைத்துக் கொள்ள விடாமுயற்சி தேவைப்படும். அளவான உற்பத்தியில் சீரான லாபம் காண்பர். வெளியூர் பயணத்தை ஆதாய நோக்கில் மட்டும் மேற்கொள்வது நல்லது.தொழிலாளர்களின்ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் நிதானம், கடின உழைப்பு ஆகியவற்றைப் பின்பற்றுவது அவசியம். உத்தியோகஸ்தர்களுக்கு  அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள், பணிகளில் தாமதநிலையைச் சந்திப்பர். நிர்வாகத்தினரின் குறிப்பறிந்து செயல்படுவது அவசியம். இல்லாவிட்டால் மேலதிகாரிகளின் அச்சுறுத்தலுக்கு ஆளாக நேரிடும். எதிலும் கவனமுடன் செயல்படுவதால் நிலைமை சீராகும். சலுகை பெறுவதில் நிதானம் அவசியம்.

குடும்ப பெண்கள் சிக்கனத்தைப் பின்பற்றுவதால் கடன்தொல்லையில் இருந்து தப்பிக்கலாம். கணவரின் அனுமதியின்றி பிறரிடம் கடன் பெறக்கூடாது. புத்திரப்பேறு வகையில் அனுகூலம் உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் அளவான உற்பத்தி, சுமாரான விற்பனை என்ற நிலை அடைவர்.

மாணவர்கள் படிப்பில் மந்தநிலை நீங்கும். ஆரம்ப, மேல்நிலை பயிலும் மாணவர்கள் பெற்றோர் அறிவுரையை ஏற்பது எதிர்கால நலனுக்கு வழிவகுக்கும். அரசியல்வாதிகளுக்கு  மக்கள் மத்தியில் செல்வாக்கைத் தக்க வைத்துக் கொள்ள போராட வேண்டிவரும். சமூகப்பணிகளை நிறைவேற்றுவதில் காலதாமதம் உண்டாகும். அதிகாரிகளிடம் மோதல் போக்கை கைவிடுவது நல்லது. ஆதரவாளர்களின் ஒத்துழைப்பைப் பெற அதிகப்பணம் செலவழிப்பர்.

பரிகாரம்: புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் சிவன் ஆலயத்திற்கு செல்லுங்கள், முடிந்தவர்கள் பாடல் பெற்ற ஸ்தலங்களுக்கும் செல்லலாம். செல்வங்கள் குவியும்

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு

செல்ல வேண்டிய தலம்: ஸ்ரீரங்கம் மற்றும் திவ்யதேசங்கள்

அதிர்ஷ்ட கல்: மரகதப்பச்சை, சாளக்கிராமம்

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பச்சை

அதிர்ஷ்ட தெய்வம்: ஸ்ரீவெங்கடாஜலபதி.

இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.


கடகம்: புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்  மற்றும் ஹி, ஹூ, ஹ, ட, டு, டே, டோ ஆகிய எழுத்துக்களை முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்கள்.

எதற்கும் கலங்காத மனமும் எந்த சூழ்நிலையிலும் எதிர்ப்பைக் கண்டு அஞ்சாத கடக ராசி அன்பர்களே. நீங்கள் நவக்கிரகங்களில் மனத்திற்குண்டான செயல்களை கவனிக்கும் சந்திரனை ஆட்சி நாயகனாக கொண்டவர்கள்.  வருங்கால முன்னேற்றம் பற்றியே எப்போதும் சிந்தை செய்து கொண்டிருப்பவர்கள். அனைவரின் மீதும் பேரன்பு கொண்டவர்கள்.

கிரகநிலை: இந்த தமிழ் புத்தாண்டில் உங்கள் சுக ஸ்தான ராசியில் சனி ராகுவும், ராசிக்கு  தொழில் ஸ்தான 10ம் இடத்தில் கேதுவும் இருக்கிறார்கள். விரைய ராசியில்  குரு 13-06-2014 அன்று உங்கள் ஜென்ம ஸ்தானத்திற்கும் பெயர்ச்சியாகிறார். சுக ஸ்தானத்தில் சனி 21-07-2014 அன்று வக்ர நிவர்த்தி ஆகிறார். 21-06-2014 அன்று ராகு பகவான் தைரிய ஸ்தான கன்னிக்கும், கேது பாக்கிய ஸ்தான  மீனத்திற்கும் பெயர்ச்சியாகிறார்கள்.  களத்திர அஷ்டமாதிபதி சனீஸ்வர பகவான் 17-12-2014 அன்று பெயர்ச்சியாகி நான்காம் ஸ்தானத்திலிருந்து ஐந்தாம் இட  விருச்சிகத்திற்கு செல்கிறார்.

ஆண்டு தொடக்கத்தில் வாழ்வில் சிரமங்களை எதிர்கொள்ள வைக்கும். விடாமுயற்சியுடன் செயல்படுவதால் மட்டுமே வாழ்வில் வளர்ச்சியைத் தக்கவைக்க முடியும். வெளியூர் பயணத்தை பயனறிந்து மேற்கொள்வது அவசியம். வீடு வாங்க தடை, மனை வாங்க தடை, சுபகாரியம் செய்வதற்கு தடை, நற்செயல்கள் எது செய்வதற்கும் தடையாக கடந்த 1 வருட காலமாக இருந்து வந்தது. இனி அது மாறும். 

வீடு, வாகனத்தில் பெறுகிற வசதி தொடர்ந்து கிடைக்கும். சிலர் கடன் பெற்று புதிய வீடு, வாகனம் வாங்குவர்.  புத்திரர்களின் வளர்ச்சிக்குத் தேவையானவற்றைச் செய்து மகிழ்வீர்கள். படிப்பு, வேலைவாய்ப்பில் அவர்களின் செயல்பாடு சிறப்பாக அமையும். பூர்வ சொத்தில் சுமாரான அளவில் வருமானம் உண்டு. உடல் நிலை திருப்திகரமாக இருக்கும். இதனால் சிரமம் குறைந்து நடைமுறை வாழ்வில் புதிய நம்பிக்கை கொள்வீர்கள். வழக்கு விவகாரங்களில் சமரச தீர்வு கிடைக்க வாய்ப்புண்டு.

கணவன், மனைவி தங்களுக்குள் கருத்துவேறுபாடு காரணமாக வாக்குவாதத்தில் ஈடுபடுவர். தொழில் சார்ந்த வகையில் இலக்கை அடைய கூடுதல் முயற்சி தேவைப்படும். வருமானத்தை விட செலவு அதிகரிக்கும். மன அமைதியை பாதுகாக்க தியானம், தெய்வ வழிபாடு ஆகியவை உதவும். தாயாருடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். தாய் வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள், பிணக்குகள் நீங்கி புதிய விதமான உறவுகள் நீடிக்கும். வேலைவாய்ப்பில் இருந்த சுணக்கம் மாறும்.

உங்களது வாக்கு வன்மைகூடும். தைரியம் கூடும். படிப்பில் கவனம் தேவை. மிகவும் எச்சரிக்கையுடன் படித்தால் சாதனைகள் புரிய வாய்ப்புண்டு். பிள்ளைகளின் வளப்பின் கவனம் தேவை. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாத்திரை செலவினங்கள் குறையும். கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். கவனம் தேவை. வீண் வாக்குவாதம் வேண்டாம். நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். தேவையற்ற வீண் விவாதங்களில் ஏடுபட வேண்டாம். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம்.

தந்தையார் உடல்நிலை முன்னேற்றம் ஏற்படும். தந்தையுடன் கருத்து பரிமாற்றம் செய்யும் போது கவனம் தேவை. வேலை செய்யும் இடங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். பண விஷயங்களில் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யவும். தூங்கப் போகும்முன் குலதெய்வத்தை வணங்கி விட்டு படுக்க செல்லவும். தேவையற்ற வீண் குழப்பங்கள், கற்பனைகள் வேண்டாம்.

தொழிலில் வளர்ச்சி பெற கடின உழைப்பு தேவைப்படும். மிதமான லாபம், சீரான வளர்ச்சி என்ற நிலை தொடரும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு ஓரளவு கிடைக்கும். நிர்வாகச் சீர்திருத்தமும், நடைமுறைச் செலவில் சிக்கனமும் லாபத்தை அதிகரிக்க வழிவகுக்கும். புதிய முயற்சிகளை இப்போதைக்கு செய்யாமல் இருப்பது நல்லது. வாடிக்கையாளர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் நோக்கத்தில் செயல்பட்டால் லாபத்தை தக்க வைக்க இயலும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணம் அதிகரிக்கும்.

அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் நிர்வாகத்தின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் தாமதத்தைச் சந்திப்பர். சிலர் பணியிட மாற்றம், ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும். அதிகாரிகளின் குறிப்பறிந்து செயல்படுவதால் பிரச்னையில் இருந்து விடுபடலாம். சகபணியாளர்களால் பணிச்சுமை ஏற்படும். இருந்தாலும் அதற்கேற்ப வருமானம் கூடும். சக பணியாளர்களிடம் தேவையற்ற விவாதத்தில் ஈடுபடுவது கூடாது. சலுகை பற்றிய எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது.

மாணவர்கள் வெளிவட்டாரப் பழக்கத்தைக் குறைப்பது நல்லது. ஆரம்ப, மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஆசிரியர், பெற்றோரின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவது அவசியம். சக மாணவர்களின் உதவியால் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். அரசியல்வாதிகள்  பொது விவகாரங்களில் நேர்மை குணத்துடன் செயல்படுவதால் மட்டுமே அவப்பெயர் வராமல் தவிர்க்கலாம். கலைத்துறையினருக்கு மிகுந்த சந்தோஷங்கள் வந்து சேரும்.

பரிகாரம் : முடிந்தால் திருவண்ணாமலை அல்லது  பர்வதமலையை பௌர்ணமியன்று வலம் வரவும். பௌர்ணமியன்று நிலாவில் 10 நிமிடங்கள் தியானம் செய்வது நல்லது.

அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடக்கு

செல்ல வேண்டிய தலம்: திருப்பதி மற்றும் மதுரை

அதிர்ஷ்ட கல்: முத்து

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்

அதிர்ஷ்ட தெய்வம்: ஸ்ரீஅம்மன்

இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.
சிம்மம்: மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்  மற்றும் மா, மி, மீ, மு, மே, மோ, டா, டூ, டே ஆகிய எழுத்துக்களை முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்கள்.

சொல்லும் சொல்லுக்கு கட்டுப்பட்டு நிற்கும் சிம்ம ராசி அன்பர்களே. நீங்கள் நவக்கிரகங்களில் நாயகனும், ஆத்மாவிற்கு உடையவனுமாகிய சூரியனை ஆட்சி நாயகனாக கொண்டவர்கள்.  எந்த விதமான சிரமங்களையும் சமாளித்து  வாழ்வில் வெற்றிக்கனியை பறிப்பீர்கள். கொஞ்சம் கர்வம் உடையவர்கள் நீங்கள்.

கிரகநிலை: இந்த புத்தாண்டில் உங்கள் தைரிய ஸ்தான ராசியில் சனி ராகுவும், ராசிக்கு  பாக்கிய ஸ்தான 9ம் இடத்தில் கேதுவும் இருக்கிறார்கள். லாபஸ்தான ராசியில்  குரு 13-06-2014 அன்று உங்கள் விரைய ஸ்தானத்திற்கு பெயர்ச்சியாகிறார். தைரிய ஸ்தானத்தில் சனி 21-07-2014 அன்று வக்ர நிவர்த்தி ஆகிறார். 21-06-2014 அன்று ராகு பகவான் தனவாக்கு ஸ்தான கன்னிக்கும், கேது ஆயுள்ஸ்தான  மீனத்திற்கும் பெயர்ச்சியாகிறார்கள்.  சனீஸ்வர பகவான் 17-12-2014 அன்று பெயர்ச்சியாகி தைரிய ஸ்தானத்திலிருந்து சுகஸ்தான  விருச்சிகத்திற்கு செல்கிறார்.

லாபஸ்தானத்தில் இருக்கும் குருபகவான் மிகுந்த ஆதாய பலன்களைத் தரும் வகையில் உள்ளார். கடந்த காலங்களில் இருந்து வந்த சிரமம் அனைத்தும் அடியோடு நீங்கும். வாழ்வில் முன்னேற்றம் பெறுவதற்கான புதிய வழி உண்டாகும். பொருளாதார நிலை திருப்தி தரும். குடும்பத்தினர் தேவை அனைத்தும் நிறைவேறும். உங்களைப்புறக்கணித்த சொந்தபந்தம், நண்பர்கள் வலிய வந்து உறவு கொண்டாடுவர். மனதில் புத்துணர்வு அதிகரிக்கும். எந்தச் செயலையும் தைரியத்துடன் அணுகுவீர்கள். தம்பி, தங்கையின் சுபநிகழ்ச்சிகளை தலைமையேற்று நடத்துவீர்கள். வீடு, வாகனத்தில் விரும்பிய மாற்றத்தை தாராளச் செலவில் நிறைவேற்றுவீர்கள்.

வீடு, மனை, ஆடை, ஆபரணங்கள் போனற விஷயங்களில் அவசரம் வேண்டாம். எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுக்கவும்.  புத்திரர் நன்கு படித்து கல்வியில் முன்னேற்றம் காண்பர். வேலைவாய்ப்பில் முன்னுரிமையும் பெறுவர். பூர்வசொத்தில் வருமானம் அதிகரிக்கும். புதிதாகச் சொத்து வாங்கும் யோகமுண்டு.  உடல் ஆரோக்கியத்துடன் திகழும். மூத்த சகோதரர்கள் முக்கிய தருணங்களில் தகுந்த ஆலோசனை கூறி வழிநடத்துவர். குடும்ப ஒற்றுமை சிறந்தோங்கும். கணிசமாக அளவில் கையிருப்பு உயரும். வெளியூர் பயணத்தை லாபநோக்கில் நடத்தி வெற்றி காண்பீர்கள்.

திருமண வயதினருக்கு வியாழ நோக்கம் அமைவதால் திருமணம் விரைவில் கைகூடும். திருமணத்தடை நீங்கி திருமணம் இனிதே நடைபெறும். நண்பர்கள் உதவிகள் செய்வர். எதை பேசினாலும் அவமானம், எதை செய்தாலும் தலைகுனிவு என கடந்த 1 வருடமாக இருந்து வந்த நிலை மாறும். உங்களது யோசனைகளை அலுவலகத்திலும், குடும்பத்திலும் மதிக்கும் நேரம் வந்து விட்டது. உங்களது மேலான யோசனைகளை சொல்ல தயாராகுங்கள். சொன்ன வாக்கை காப்பாற்ற முடியாமல் தவித்த நிலையும் மாறப் போகிறது. இனியாவது வாக்கு கொடுப்பதற்கு முன் யோசித்து கொடுக்கவும்.

தைரியம் பிரகாசிக்கும் நேரமிது. எனவே எந்த முடிவையும் சட்டென்று முடிவெடுங்கள். நல்ல விஷயங்களை தள்ளிப் போட வேண்டாம். தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புண்டு. கவனம் தேவை. பிள்ளைகள் படிப்பில் மிகுந்த கவனம் தேவை. குழந்தைகள் இல்லாதவர்களுக்கு சந்தாண பாக்கியம் கிட்டும். அவர்களை கடிந்து கொள்ள வேண்டாம். எடுத்து சொல்லுங்கள். அவர்களை அவசரப்படுத்த வேண்டாம். சிறிய நோய் என்றாலும் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. மருத்துவம் சார்ந்த செலவுகள் காத்திருக்கின்றன, கவனம் தேவை. கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். இருந்தாலும் விட்டு கொடுத்து போவது நல்லது.

தந்தையார் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வேலைசார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு வெளிநாட்டு பயணங்கள் கிடைக்க கூடும். வேலை இடமாற்றம், பதவிஉயர்வு ஏற்படும். சம்பள உயர்வும் கிடைக்கும். லாபகரமான முதலீடுகள் செய்வீர்கள். எதிர்கால தேவை கருதி சேமிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் நிறைவேறும். நவீன எந்திரங்களின் மூலம் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பணியில் திறமையை வெளிப்படுத்துவர். நிர்வாகத்தினரின் ஆதரவால் பதவி உயர்வு, பாராட்டு கிடைக்கும். பணிச்சுமையில் இருந்து விடுபட்டு நிம்மதி காண்பர்.

மாணவர்கள் அக்கறையுடன் படித்து கல்விவளர்ச்சி காண்பர். சக மாணவர்கள் மத்தியில் நற்பெயர் உருவாகும். பெற்றோரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவர். படிப்பு முடித்துவிட்டு, வேலைவாய்ப்பை எதிர்பார்ப்பவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். அரசியல்வாதிகள் மற்றும் சமூகநல சேவகர்களுக்கு  இதுநாள்வரை செய்து வந்த சமூகப்பணிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். புதிய பதவி, பொறுப்பு தாமாக வந்து சேரும். ஆதரவாளர் மத்தியில் செல்வாக்கு கூடும்.

அதி காரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசியல் பணிக்கு புத்திரர்களாலான உதவிகளைச் செய்வர். எதிரிகள் தாமாக விலகிச் செல்வர். புதிய சொத்து சேர்க்கை உண்டாகும் . வழக்குவிவகாரத்தில் சாதகமான தீர்வு கிடைக்கும்.கலைத்துறையில் உள்ளவர்கள் தொல்லைகள் கொடுத்தவர்கள் ஒதுங்கி செல்வர். வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கும். வெளிநாடுகளுக்குச் சென்று பணிகளை கவனிக்க வேண்டி வரும்.

பரிகாரம் : ஞாயிற்றுக்கிழமைதோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று சந்தனாதி தைலத்தை அபிஷேகம் செய்து விளக்கு ஏற்றி வழிபடவும். முடிந்தவர்கள் ஸ்ரீசூரியனார் கோவில் சென்று வழிபட்டு வரலாம். காலையில் சூரியன் உதிக்கும் போது தரிசம் செய்வதும் நன்மையைத் த்ரும்.

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு

செல்ல வேண்டிய தலம்: திருவண்ணாமலை மற்றும் சூரியனார் கோவில்

அதிர்ஷ்ட கல்: மாணிக்கம், பவளம்

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை

அதிர்ஷ்ட தெய்வம்: ஸ்ரீசிவன், ஸ்ரீசூரியன்

இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.
கன்னி: உத்திரம் 2, 3, 4ம் பாதம், ஹஸ்தம், சித்திரை 1, 2ம் பாதங்கள்  மற்றும் டோ, ப, பா, பி, பூ, ஷ, ட, பே, போ ஆகிய எழுத்துக்களை முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்கள்.

இனிமையாக பேசி எல்லோர் மனதிலும் இடம் பிடிக்கும் கன்னி ராசி அன்பர்களே. நீங்கள் நவக்கிரகங்களில் வித்தைக்குநாயகனும், நரம்புகளுக்கு உடையவனுமாகிய புதனை ஆட்சி நாயகனாக கொண்டவர்கள். நல்ல செயல்கள் செய்து தன்னை பிறருக்கு உணர்த்துவீர்கள். எந்த விதமான பொறுப்புகளை தனக்கே உரிய பாணியில் செய்து முடிப்பீர்கள்.

கிரகநிலை: இந்த புத்தாண்டில் உங்கள் தனவாக்கு ஸ்தான ராசியில் சனி ராகுவும், ராசிக்கு  ஆயுள் ஸ்தான 8ம் இடத்தில் கேதுவும் இருக்கிறார்கள். தொழில் ஸ்தான ராசியில் உள்ள  குரு 13-06-2014 அன்று உங்கள் லாப ஸ்தானத்திற்கும் பெயர்ச்சியாகிறார். தனவாக்கு ஸ்தானத்தில் சனி 21-07-2014 அன்று வக்ர நிவர்த்தி ஆகிறார். 21-06-2014 அன்று ராகு பகவான் ஜென்ம ஸ்தான கன்னிக்கும், கேது களத்திர ஸ்தான  மீனத்திற்கும் பெயர்ச்சியாகிறார்கள்.  சனீஸ்வர பகவான் 17-12-2014 அன்று பெயர்ச்சியாகி தன ஸ்தானத்திலிருந்து தைரிய ஸ்தான  விருச்சிகத்திற்கு செல்கிறார்.

கடந்த காலங்களில் அளப்பரிய நற்பலன்களை குருவருளால் பெற்றீருப்பீர்கள். பத்தாம் இடத்தில் அமர்ந்துள்ள குரு, உங்கள் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்துவார். பத்தில் குரு பதவிக்கு இடர் என்பது ஜோதிட சாஸ்திர மொழி என்றாலும் ஜென்ம ஜாதகத்தில் உள்ள சந்திரனுக்கு பத்தாம் இடத்தில் கோட்சார குரு அமர்வதால் கஜ கேசரி யோக பலனைத்தரும். எனவே, நன்மையும் சிரமமும் கலந்த பலன் வாழ்வில் உண்டாகும். தாராள பணப்புழக்கம் இருப்பதால் குறுக்கிடும் சிரமங்களைக் குறைத்துவிடுவீர்கள்.

தம்பி, தங்கையின் எதிர்பார்ப்புகளை ஓரளவு நிறைவேற்றுவீர்கள். வீடு, வாகனத்தில் தேவையான நடைமுறை மாற்றங்களைச் செய்து முடிப்பீர்கள். புத்திரர் வேண்டாத நட்பும், பிடிவாத குணமும் கொண்டு செயல்படுவர். இதமான அணுகுமுறையால் அவர்களை பக்குவப்படுத்தி நல்வழிப்படுத்துவீர்கள். ஆன்மிகம் நாட்டம் அதிகரிக்கும். நல்லவர்களின் ஆலோசனையைக் கேட்டுப் பெறுவீர்கள். உடல்நலனில் அக்கறை ஏற்படும். எதிரியால் இருந்து வந்த தொல்லை குறையும். வழக்கு விவகாரங்களில் அனுகூலமான தீர்வு கிடைக்கும். கடன் தொந்தரவை ஓரளவு சரிக்கட்டுவீர்கள். தம்பதியர் ஒற்றுமை உணர்வுடன் நடந்து குடும்பத்தில் மகிழ்ச்சியை நிலைநாட்டுவர்.

நண்பர்கள் உங்கள் கருத்துக்கு மதிப்பளித்து நடப்பர். ஆடம்பர எண்ணத்துடன் அதிக பயன் தராத பொருள் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. தொழிலில் ஏற்படும் குறுக்கீடுகளை மாற்றுத்திட்டத்தின் மூலம் முறியடிக்க முயல்வீர்கள். தொழில் சார்ந்த பயணத்தை அடிக்கடி மேற்கொள்வீர்கள். தொழிலில் உற்பத்தி தரத்தை உயர்த்துவதில் குறுக்கீடுகளைச் சந்திப்பீர்கள். கணவன் - மனைவியிடையே கருத்து மோதல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. பேச்சிலும் செயலிலும் கவனம் தேவை. தந்தையார் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.

வேலை செய்யும் இடத்தினில் மேலதிகாரிளுடன் வாக்குவாதம் ஏற்படலாம். உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களிடம் மென்மையை கடைபிடியுங்கள். நல்ல பெயர் கிடைக்கும். பணி மாற்றம் கிடைக்கும். புதிய இடத்தில் பணிச்சுமை ஏற்படலாம். புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்டு பணியினை செவ்வனே செய்யுங்கள். லாபகரமான தொழில்களில் முதலீடு செய்யுங்கள். எதிர்காலத்திற்கு சேமித்து வைக்கும் நேரமிது. வீண் ஆடம்பர செலவுகள், தேவையற்ற வீண் பேச்சுகள் ஆகியவற்றை குறையுங்கள். புதிய ஒப்பந்தங்களைப் பெறுவதில் சிரமத்தை எதிர்கொள்வீர்கள். நிர்வாக நடைமுறைச்செலவு அதிகரிக்கும். கடன் பெற்று அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வது நல்லதல்ல. புதிய தொழில் முயற்சியை இப்போதைக்கு தவிர்ப்பது அவசியம்.

உத்தியோகஸ்தர்கள் உங்கள் துறையில் பணிபுரிபவர்கள் பணிசார்ந்த புதிய விஷயங்களை புரிந்து கொள்வதில் தயக்கம் கொள்வார். சகபணியாளர்களின் உதவி ஓரளவு கிடைக்கும். நிர்வாக அதிகாரிகளின் குறிப்பறிந்து நடப்பது மிக அவசியம். திட்டமிட்டு பணியாற்றினால் மட்டுமே நிர்ணயித்த காலவரையறைக்குள் பணியிலக்கை எட்ட முடியும். பணவரவு சீராக இருக்கும். பணிச்சுமையால் வருத்தம் ஏற்பட்டாலும், உழைப்பிற்கேற்ப ஊதியம் கிடைக்கும். எதிர்பார்த்த சலுகையில் சில கிடைக்கும். பணியிடத்தில் பணி தவிர்த்த பிறவிஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.

சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனத்துடன் கடின உழைப்பால் சுமாரான உற்பத்தி, விற்பனை காண்பர். பணப்பரிவர்த்தனையில் தகுந்த பாதுகாப்பு நடைமுறை அவசியம். மாணவர்கள் கல்வியில் வளர்ச்சி காண்பர். படிப்புக்கான பண வசதி சீராக கிடைக்கும். வெளிவட்டார விஷயங்களில் ஈடுபாடு குறையும். வெளிநாட்டில் பயிலும் மாணவர்கள் அக்கறையுடன் படித்து முன்னேற்றம் காண்பர். படித்து முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு பெறுவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புண்டு.

அரசியல்வாதிகள் மற்றும் சமூகப்பணியில் உள்ளவர்களுக்கு  ஆதரவு மனப்பாங்குடன் நடந்த சிலரே உங்களின் எதிரியாக மாறிவிடுவர். சமூகப்பணியில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவீர்கள். புத்திரர், உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிரிகளின் மறைமுக சூழ்ச்சிக்கு தக்க பதிலடி கொடுப்பீர்கள். வழக்கு விவகாரத்தில் ஓரளவே சாதகமான தீர்வு கிடைக்கும். புதிய பதவி, பொறுப்பு பெறுவதில் தாமதம் உண்டாகும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் வந்து குவியும்.

பரிகாரம் : புதன்கிழமைதோறும் அருகிலிருக்கும் ஐயப்பன் கோவிலுக்கு சென்று நெய் விளக்கு ஏற்றி வழிபடவும்.
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தெற்கு

செல்ல வேண்டிய தலம்: திருவெண்காடு, சபரிமலை, பாபநாசம் சொரிமுத்தையனார்.

அதிர்ஷ்ட கல்: பச்சை மரகதம், வைரம்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்

அதிர்ஷ்ட தெய்வம்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீஐயப்பன்

இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.




துலாம்: சித்திரை 3, 4ம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்  மற்றும் ர, ரா, ரி, ரு, ரே ,ரோ, த , தா, தி, து  ஆகிய எழுத்துக்களை முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்கள்.

கடமையே கண்ணாக கொண்டு காரியத்தை முடிக்கும் துலாம் ராசி அன்பர்களே. நீங்கள் நவக்கிரகங்களில் அசுரகுரு என்றழைக்கப்படும் தனகாரகனாகிய சுக்கிரனை ஆட்சி நாயகனாக கொண்டவர்கள். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதன் மூலம் பட்டம் பதவிகள் பெறுவீர்கள். திறமைகள் பல கொண்டவர்கள்.

கிரகநிலை: இந்த தமிழ் புத்தாண்டில் உங்கள் ஜென்ம ராசியில் வக்ர சனி ராகுவும், களத்திட ஸ்தான ராசியில் கேதுவும்  இருக்கிறார்கள். குரு 13-06-2014 அன்று உங்கள் தொழில் ஸ்தானத்திற்கு பெயர்ச்சியாகிறார். ஜென்ம ராசியில் சனி  21-07-2014 அன்று வக்ர நிவர்த்தி ஆகிறார். 21-06-2014 அன்று ராகு பகவான் விரைய ஸ்தான கன்னிக்கும், கேது ரண ருண ஸ்தான  மீனத்திற்கும் பெயர்ச்சியாகிறார்கள். சுகபஞ்சமாதிபதி  சனீஸ்வர பகவான் 17-12-2014 அன்று பெயர்ச்சியாகி ஜென்ம ராசியிலிருந்து தனஸ்தான  விருச்சிகத்திற்கு செல்கிறார்.

ஆண்டு தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடமான மிதுனத்தில் குருபகவான் மிகுந்த அனுகூலத்துடன் உள்ளார். கடந்த வருடத்தில் கிரகங்களின் நிலைமையால் வாழ்வில் பலவித கஷ்டங்களை தந்தது. இதனால் உங்கள் பலத்தை நீங்களே உணர்ந்து கொள்கிற புத்தியும், புதிய நம்பிக்கையும் ஏற்படும். எங்கு போனாலும் உங்களுக்கு நன்மையே நடக்கும். அந்தளவுக்கு பாதுகாப்பை இந்த ஆண்டு தரும். உங்கள் வாழ்வில் ஓடி ஓடி உழைத்து முன்னேற புதிய வாய்ப்பு வாசல்கதவைத் தட்டும். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்வதால், நன்மையும் தாராள வருமானமும் கிடைக்கும்.

குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும். தம்பி, தங்கைகளுக்கு திட்டமிட்ட திருமண நிகழ்ச்சி நல்லபடியாக நடக்கும். வீடு, வாகன வகையில் செய்ய இருந்த மாற்றம் சிறப்பாக நிறைவேறும்.  பிள்ளைகள் செயல்திறனை வளர்த்து படிப்பு, பணி, தொழிலில் முன்னேற்றம் காண்பர். வேலையில்லாத குழந்தைகளுக்கு தகுந்த பணி கிடைக்கும்.  சொத்துவாங்க யோகம் உண்டு. பூர்வ சொத்தில் கிடைக்கிற வருமானம் உயரும். உடல்நலம் நன்றாக இருக்கும்.

ஆடம்பரச்செலவு செய்யும் எண்ணம் மேலோங்கும். தம்பதியர் ஒற்றுமையாக நடந்து சமூகத்திலும் உறவினர்களிடமும் நன்மதிப்பு பெறுவர். வியாபாரம் செய்வோருக்கு அபரிமிதமான பணவரவு கிடைக்கும். ஏழரைச் சனிகாலம் என்பதால் அவ்வப்போது ஏற்படும் தடைகளைக் கடக்க வேண்டியிருக்கும். பணியாளர்களின் தேவைகளை நிறைவேற்றி நற்பெயர் பெறுவீர்கள். சங்கங்களில் சிலருக்கு பதவி பொறுப்பு கிடைக்கும். சோம்பலைத் தவிர்த்து உழைத்தால் அனைத்து விதமான இனங்களிலும் வெற்றிகளைக் குவிப்பீர்கள்.

மின்னணு சாதனங்கள் சார்ந்த வியாபாரம் செய்பவர்கள் விற்பனையில் முன்னேற்றம் அடைவர். அதிக லாபம் கிடைக்கும். சேமிப்பு உயரும். புதிய நிறுவனங்களில் அதிக சரக்கு கொள்முதல் செய்வீர்கள். வெளிநாட்டு பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்களது பணிகளை எளிதாக நிறைவேற்றுவர். அதிகாரிகளின் பாராட்டு, நல்ல சம்பளம், பிற சலுகைகள் பெறுவர். அனுபவசாலிகள், தந்தையின் ஆலோசனையை ஏற்று நடப்பதால் பணியில் உயரிய பலன்களைபெறுவீர்கள். பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை எளிதாக புரிந்து செயல்படுவர். பணி இலக்கு திட்டமிட்ட காலத்தைவிட சீக்கிரம் நிறைவேறும். பதவி உயர்வு, சலுகைகள் கிடைக்கும்.

குடும்பப் பெண்கள் கணவரை அனுசரித்து நடந்து நற்பெயர் பெறுவர். குடும்பச் செலவுக்கான பணவசதி தாராளமாகக் கிடைக்கும். மகிழ்ச்சிகர வாழ்வுமுறை தொடர்ந்திடும். புத்திரப்பேறு விரும்புபவர்களுக்கு அனுகூலம் உண்டு. ஆபரணச்சேர்க்கை தகுதிக்கேற்ப கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் ஆர்டர் கிடைத்து உற்பத்தி, விற்பனையை உயர்த்துவர். உபரி பணவரவு உண்டு. இளம்பெண்களுக்கு நல்ல வரன் அமையும்.

மாணவர்கள்  தேர்ச்சி பெறுவர். ஆராய்ச்சி மாணவர்கள் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வெளிநாடு செல்ல முயற்சிக்கலாம். சக மாணவர்கள் படிப்பில் உதவுவர். படித்து முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கிடைக்கும். சுற்றுலா பயணத்திட்டம் நல்லவிதமாக நிறைவேறும். அரசியல்வாதிகள் கடந்த காலத்தில் ஏற்பட்ட குளறுபடியை சரிசெய்வீர்கள். ஆதரவாளர்களிடம் எதிர்பார்த்த நன்மதிப்பு கிடைக்கும். புதிய பதவி தேடிவரும். உடன் உள்ளோர்கள் உங்கள் பணி சிறக்க உதவி புரிவர். எதிரியை வெல்லும் திறன் அறிவீர்கள். கூடுதல் சொத்து கிடைக்கும். அரசு அதிகாரிகளின் மதிப்பைப் பெற்று திட்டங்களை எளிதாக நிறைவேற்றுவீர்கள்.

அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள் உற்பத்தி, விற்பனை சிறந்து தாராள பணவரவு காண்பர். சுபநிகழ்ச்சி சிறப்பாக நிறைவேறும். தள்ளி தள்ளி போய்க் கொண்டிருந்த அனைத்து சுபகாரியங்களையும் குரு நடத்தி வைப்பார். தயாராக இருங்கள். எந்த காரியத்தை நினைத்தாலும், எடுத்தாலும் பயந்து கொண்டிருந்தீர்களே, இனி அந்த பயத்தை எல்லாம் தூக்கி தூர வையுங்கள். எந்த காரியத்தையும் துணிந்து செய்யுங்கள்.

இளைய ச்கோதரத்தின் உடல்நிலையில் கவனம் தேவை. தாயார் தாய்வழி உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீடு, வாகனம் யோகம் ஏற்படும். ரொம்ப நாளாக வசூலாகாமல் இருந்த கடன் வசூலாகும். உடல்நிலையில் கவனம் தேவை. இயந்திரங்களை கையாளும் மிகுந்த எச்சரிக்கை தேவை. டூவீலர் ஆகியவற்றிலும் கவனம் தேவை. கணவன் மனையின் உறவில் நல்ல முன்னேற்றம் உண்டு. கொஞ்சம் கோபத்தை குறைத்து கொள்வது நல்லது.

பரிகாரம் : வெள்ளிதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று ஸ்ரீகருடனுக்கு நெய் விளக்கு ஏற்றி வணங்கி வரவும். முடிந்தவரை  கருட தரிசனம் செய்யவும். தினமும் முன்னோர்களை வணங்கவும்.

அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தெற்கு

செல்ல வேண்டிய தலம்: கஞ்சனூர், திருப்பதி, ஸ்ரீவில்லிபுத்தூர்

அதிர்ஷ்ட கல்: வைரம், பிளாட்டிணம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு

அதிர்ஷ்ட தெய்வம்: ஸ்ரீலக்ஷ்மி

இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.


விருச்சிகம்: விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை ஆகிய நக்ஷத்திரங்கள் பிறந்தவர்கள்  மற்றும் தோ, நா, நீ, நே, நோ, ய, யி, யு, நு  ஆகிய எழுத்துக்களை முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்கள்.

உழைப்பின் மூலமாக மட்டுமே புகழை அடையத் துடிக்கும் விருச்சிகம் ராசி அன்பர்களே. நீங்கள் நவக்கிரகங்களில் தைரியத்தை வழங்குபவன் என்றழைக்கப்படும் பூமிகாரகனாகிய செவ்வாயை ஆட்சி நாயகனாக கொண்டவர்கள். குறிக்கோளுடன் வாழ்ந்து வாழ்க்கையை எடுத்துக்காட்டாக வாழிபவர்கள்.

கிரகநிலை: இந்த ஜய புத்தாண்டில் உங்கள் ரண ருண ரோக ஸ்தான ராசியில் கேதுவும், ராசிக்கு  விரையஸ்தான 12ம் இடத்தில் சனியுடன் ராகுவும் இருக்கிறார்கள். ஆயுள் அஷ்டமஸ்தானத்திலுள்ள தனவாக்கு பஞ்சமாதிபதி  குரு 13-06-2014 அன்று உங்கள் பாக்கிய ஸ்தானத்திற்கும் பெயர்ச்சியாகிறார். விரையஸ்தானத்தில் சனி 21-07-2014 அன்று வக்ர நிவர்த்தியும் ஆகிறார். 21-06-2014 அன்று ராகு பகவான் லாபஸ்தான கன்னிக்கும், கேது பஞ்சம பூர்வ ஸ்தான  மீனத்திற்கும் பெயர்ச்சியாகிறார்கள். தைரியசுகாதிபதி சனீஸ்வர பகவான் 17-12-2014 அன்று பெயர்ச்சியாகி விரைய ஸ்தானத்திலிருந்து ஜென்ம ராசி  விருச்சிகத்திற்கு செல்கிறார்.

குரு அனுகூலக்குறைவான தன்மையில் உள்ளார். அஷ்டம ஸ்தான குரு வாழ்வில் சில கஷ்டங்களை எதிர்கொள்ள வைப்பார். ஏழரைச்சனியின் பிடியிலும் சிக்கியுள்ள நேரம் இது. மனதில் இனம் புரியாத தயக்கம், கலக்கம் போன்றவை இருக்கும்.  இருப்பினும் குருவின் பார்வை பதிகிற இடங்களின் வழியாக நல்ல பலன் வந்து சேரும். குரு தனது 5, 7, 9 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு 12ம் இடமான வெளியூர் பயணம், சுபச்செலவு, ராசிக்கு 2ம் இடமான பணவரவு, குடும்ப ஒற்றுமை, 4ம் இடமான வீடு, வாகனம் ஆகிய ஸ்தானங்களை பார்க்கிறார். இந்த சமயத்தில் பேச்சு தான் உங்களுக்கு எதிரி.

பணவரவு ஓரளவு நன்றாக இருக்கும் என்றாலும், கிடைக்கிற வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டால் தான் இந்த நிலை. நடைமுறை செலவு அதிகரிக்கும். சிறு அளவில் கடன் வாங்க நேரிடலாம். தம்பி, தங்கைகள் அவர்களுடைய சுயலாபத்தையே பார்ப்பார்கள். வீடு, வாகன வகையில் எல்லாம் நல்லபடியாகவே இருக்கும். தாய்வழி உறவினர்கள் உங்கள் வாழ்வு சிறக்க உதவுவர். பிள்ளைகள் படிப்பில் தரத்தேர்ச்சி பெறுவர். அவர்களுக்கு கவுரவமான வேலை கிடைக்கும். உடல்நிலை பாதிக்கப்படலாம். உயரமான கட்டடங்களில் பணி செய்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். படி, லிப்டில் ஏறும் போது கவனம் தேவை. தண்ணீர் அதிகமாக உள்ள இடங்களிலும், நெருப்பு, மின்சார விஷயத்திலும் கவனம்.

தம்பதியர் ஒற்றுமையுடன் நடந்து குடும்ப மகிழ்ச்சி பாதுகாத்திடுவர். முக்கிய தருணங்களில் நண்பர்களின் உதவி கிடைக்கும். குழந்தைகளின் திருமணம், படிப்புச்செலவு உள்ளிட்ட சுபச்செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணம் புதிய அனுபவமும் நன்மையும் பெற்றுத்தரும். வாகன போக்குவரத்தில் மிதவேகமும் கூடுதல் கவனமும் அவசியம். தொழில் சார்ந்த வகையில் பணிச்சுமை அதிகரிக்கும். தளராத முயற்சியால் இலக்குகளை நிறைவேற்றுவீர்கள்.

தொழிலதிபர்கள் உற்பத்தி இலக்கை எட்டுவதில் தாமதம் அடைவர். மற்றவர்களுக்கும் இதே நிலையே. குறைந்த லாபம் பெறும் வகையிலான ஒப்பந்தங்களே கையெழுத்தாகும். தொழிற்சாலையில் பாதுகாப்பு நடைமுறைகளை கவனத்துடன் செயல்படுத்த வேண்டும். நிர்வாகச் செலவு அதிகரிக்கும். நண்பர்களின் உதவியால் சிலருக்கு தொழில் தாக்குப்பிடிக்கும். வியாபாரிகள் விற்பனை இலக்கை எட்ட கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். மற்றவர்களுக்கு போட்டி கடுமையாக இருக்கும். லாபம் ஓரளவு கிடைக்கும். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு நடைமுறை பின்பற்ற வேண்டும். பிறருக்காக எந்த வகையிலும் ஜாமீன் தரக்கூடாது. சுயதொழில் துவங்க நினைப்பவர்களுக்கு இது உகந்த சூழ்நிலை அல்ல. இருந்த போதிலும் தக்க ஆலோசனைகளோடு புதிய தோழில் தொடங்கலாம்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் சிரமம் குறுக்கிடும். நிர்வாகத்தின் கண்டிப்பினால் மனச்சோர்வு ஏற்படும். சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. கம்பெனி, அலுவலக நடைமுறைகளை உணர்ந்து செயல்பட வேண்டிய நேரம். பணிபுரியும் பெண்கள் கவனக்குறைவால் பணியில் குளறுபடி உருவாகப்பெறுவர். ஒழுங்கு நடவடிக்கை இருக்கும். இரவல் பொருள் கொடுக்க, வாங்கக்கூடாது.

குடும்பப் பெண்கள் பணத்தட்டுப்பாடு காரணமாக, செலவுகளை கட்டுப்படுத்தும் விதம் குறித்து கவலைகொள்வர். கணவர், குடும்ப உறுப்பினர்களின் உதவி மனதுக்கு ஆறுதல் தரும். தாய்வழி சீர்முறை கிடைத்து மகிழ்வீர்கள். சுயதொழில் புரியும் பெண்கள் குறைந்த உற்பத்தி, சுமாரான விற்பனை காண்பர். நடைமுறைச்செலவு அதிகரிக்கும். இயன்றவரை ரொக்கத்திற்கு பொருள் விற்பது நல்லது.

மாணவர்களுக்கு உரிய பயிற்சியும், கூடுதல் அக்கறையுமே தரத்தேர்ச்சியை தக்கவைக்கும். வெளிவட்டார பழக்க வழக்கத்தையும், வாகனத்தில் செல்வதையும் பெருமளவில் குறைப்பது நல்லது. படிப்பிற்கான பணவசதி கிடைக்க தாமதமாகும். சாகச விளையாட்டுகளில் ஈடுபடக்கூடாது.

அரசியல்வாதிகளுக்கு கடந்த காலத்தில் பெற்ற நற்பெயருக்கு களங்கம் வரும் வகையில் மாறுபட்ட நிகழ்வுகள் குறுக்கிடும். பொது விவகாரங்களில் ஒதுங்கிப் போவதால் சிரமம் தவிர்க்லகாம். ஆதரவாளர்கள் உங்களை விட்டு விலகிச் செல்லலாம். மதிப்பு குறையும். அதிகாரிகளை அனுசரித்து சென்றால் தான், அரசுத்தொடர்பான காரியங்களை சாதிக்க முடியும். எதிரிகள் கலந்துகொள்கிற நிகழ்ச்சிகளை தவிர்ப்பதால் நன்னிலை பெறலாம்.

விவசாயிகளுக்கு கூடுதல் நேரம் உழைக்க வேண்டியிருக்கும். அளவான மகசூல், சுமாரான பணவரவு உண்டு. கால்நடை வளர்ப்பில் வருகிற லாபம் மனதுக்கு நம்பிக்கை தரும்.

பரிகாரம் : செவ்வாய்தோறும் அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்குச் சென்று வலம் வந்து வணங்கி வரவும். நல்லெண்ணெய் விளக்கு ஏற்றலாம். இலுப்பைஎண்ணையில் வீட்டில் விளக்கு ஏற்றவும்.

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு

செல்ல வேண்டிய தலம்: திருச்செந்தூர், மதுரை, திருவெற்றியூர்

அதிர்ஷ்ட கல்: பவழம், ருத்ராக்ஷம்

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, மஞ்சள்

அதிர்ஷ்ட தெய்வம்: ஸ்ரீமுருகன், ஸ்ரீஅம்பாள்

இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.

No comments:

Post a Comment