Saturday, April 12, 2014

பத்திரிக்கையாளர்கள் முன்னாள் பதற வைக்கும் திருட்டு...

பிரேசில் நாட்டில் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்து கொண்டிருந்த பெண்ணிடம் வாலிபர் ஒருவர் திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனிரோ, நகரில் பெண் ஒருவர் நேற்று காலை தொலைக்காட்சி ஒன்றிற்கு, தங்கள் நகரத்தில் அதிகரித்து வரும் குற்றங்களை பற்றி பேட்டியளித்து கொண்டு இருந்தார்.

அப்போது, வாலிபர் ஒருவர் அவர் கழுத்தில் உள்ள தங்கச் சங்கிலியை பறித்து செல்ல முயற்சி செய்து உள்ளார்.


ஆனால் சங்கிலியை அந்த வாலிபரால் எடுத்து செல்ல இயலாவிட்டாலும், சங்கிலியானது அறுந்து விட்டது.

இதற்கிடையில் வாலிபரை பிடிக்க முயன்ற தொலைக்காட்சி நிரூபரினால் அவரை துரத்தி பிடிக்க முடியவில்லை.

ரியோ டி ஜெனிரோ நகரில் கடந்த ஆண்டை விட 40 சதவிதம், கொள்ளை குற்றங்கள் அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



- See more at: http://www.manithan.com/news/20140412110420#sthash.D67C3jfT.dpuf

No comments:

Post a Comment