Monday, March 24, 2014

தெற்கு இந்திய பெருங்கடலில் மிதக்கிறது மாயமான மலேசிய விமானம்

மலேசியா போக்குவரத்து அதிகாரி இன்று வெளியிட்டுள்ள ஒரு அதிரடி அறிக்கையில் இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் 75 அடி நீளமுள்ள ஒரு மிகப்பெரிய பொருள் மிதந்து கொண்டு இருப்பதாகவும், அந்த பொருள் காணாமல் போன மலேசிய விமானம் MH370ஆம் இருக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் மலேசியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சீனாவின் சாட்டிலைட் நேற்று மாலை இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் ஒரு மிகப்பெரிய மர்ம பொருள் ஒன்று மிதந்து கொண்டிருப்பதை கண்டுபிடித்துள்ளது. இந்த தகவல் முதன்முதலாக மலேசிய போக்குவரத்து அமைச்சருக்கு அனுப்பப்பட்டது., மேலும் சீனாவின் தொலைக்காட்சியிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(மர்மமான மலேசிய விமானம்! தொடரும் மர்ம விபரங்கள் – பாகம் 2 – கனடாவிலிருந்து ஆய்வாளர் சுதர்மா விசேட செவ்வி)

மிதந்து கொண்டிருக்கும் மர்ம பொருள் 22மீட்டர் நீளமும், 30 மீட்டர் அகலமும் உடையது என்றும் அதன் வடிவம் மாயமான மலேசிய விமானத்தை ஒத்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த தகவலால் இதுவரை ஆஸ்திரேலியா பிரதமர் இரண்டு பொருள்கள் மிதந்து கொண்டிருப்பதாக கூறிய இடத்தில் தேடுவதற்கு சென்ற மீட்பு படைகள் தற்போது சீன சாட்டிலைட் கூறிய இடத்திலும் தேடுவதற்கு முடிவு செய்துள்ளது.
mh370_1mh370_2mh370_3
http://www.jvpnews.com/srilanka/63165.html

No comments:

Post a Comment