Sunday, July 1, 2012

கூகுள் ப்ளேயின் சேவை விரிவாக்கம் (வீடியோ இணைப்பு) !!!


முன்னணி இணைய நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழும் கூகுள் நிறுவனமானது, தனது ஒன்லைன் சேவைகளுள் ஒன்றான கூகுள் பிளேயின் சேவையினை விரிவாக்கம் செய்துள்ளது.
இச் சேவை விரிவாக்கம் மூலம் படங்கள், சஞ்சிகைகள், தொலைக்காட்சி நாடகங்கள், இசை அல்பங்கள் என்பனவற்றினை ஒன்லைனில் விற்பனை செய்வதற்கு தீர்மானித்துள்ளது.
இதுவரையில் ஒன்லைன் ஸ்டோர் மூலமாக வாடகை சேவையை நடாத்தி வந்த கூகுள் பிளே தற்போது அவற்றினை விற்பனை செய்ய முன்வந்துள்ளமை பயனர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெறும் எனவும், விரைவில் புதிய அப்பிளிக்கேஷன்களையும் இவ்வசதியினூடாக அறிமுகப்படுத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments:

Post a Comment