Thursday, March 1, 2012

உங்கள் அகதிகளை நீங்களே எடுங்கள்- சுவிஸ் அரசின் முடிவு!



சுவிஸ் நாட்டில் அகதி தஞ்சம் மறுக்கப்பட்ட அகதிகளை திருப்பி எடுக்க விருப்பம் தெரிவிக்கின்ற நாடுகளுடன் தனது அபிவிருத்தி உதவிகளை மேற்கொள்வதற்கு சுவிஸ் அரசாங்கம் விரும்பம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த நடவடிக்கை பலனளிக்காது என்று அவதானிகள் சிலர் தெரிவிக்கின்றனர்.
இதன்மூலம் சுவிஸ் அரசாங்கம் தெரிவிக்கும் கருத்து என்னவென்றால் தஞ்சம் மறுக்கப்பட்ட உங்கள் நாட்டுப் பிரஜைகளை நீங்கள் திருப்பி எடுத்துக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் உங்கள் நாட்டுக்கான அபிவிருத்தி உதவி நிறுத்தப்பட்டு விடும் என்பதுதான்.
குறிப்பாக ஆபிரிக்கா மற்றும் அரபு நாடுகளை இலக்கு வைத்தே இச்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு ஒத்துழைக்க விரும்பும் நாடுகளுடன் தான் எதிர்காலத்தில் சர்வதேச ஒத்துழைப்பு பேணப்படும் என்று கடந்த புதன்கிழமை சுவிஸ் தலைநகர் பேர்னில் கூடிய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.

No comments:

Post a Comment