இச்சம்பவத்தின் போது இச்சம்பவத்தின் போது சத்தியநாதன் என்ற வயோதிபரும் 32 வயதுடைய சர்மிளா பாலசுப்பிரமணியம் என்பவருமே உயிரிழந்தனர்.
இவ்வாறு உயிரிழந்த இருவரது சடலங்களும் நீதிமன்றின் உத்தரவின் பேரில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதனடிப்படையில் சர்மிளா சுப்பிரமணியம் என்ற யுவதி கழுத்து நெரிக்கப்பட்டே கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையின் மூலம் ஊர்ஜிதமாகியுள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டதுடன் சத்தியநாதன் என்பவருடைய பிரேத பரிசோதனை நிறைவடையவில்லையென தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறான நிலையிலேயே குறித்த வயோதிபரான சத்தியநாதன் என்பவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதனடிப்படையில் வெள்ளவத்தை 37 ஆவது ஒழுங்கையில் அமைந்துள்ள தொடர்மாடி வீட்டில் இடம்பெற்ற மரணங்களில் ஒன்று தற்கொலையெனவும் மற்றையது கொலையெனவும் நிரூபணமாகியுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்:
No comments:
Post a Comment