Monday, February 13, 2012

வெளிநாடுகளுக்கான தொலைபேசி கட்டணங்கள் அதிகரிப்பு!!



எதிர்வரும் மார்ச் மாதம் முடிவில் வெளிநாட்டு தொலைபேசி அழைப்புக்களில் இருந்து பெறப்படும் வருமானம் 2 பில்லியன் ரூபாய்களாக இருக்க வேண்டும் என்று அரசாங்கம் எதிர்ப்பார்க்கிறது.
இந்த தகவலை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இதன் அடிப்படையில் எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் வெளிநாடுகளுக்கான தொலைபேசிக்கட்டணங்கள் மீளமைக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் அநுஸ பெல்பிட்ட தெரிவித்துள்ளார்.
சீரமைப்பின்படி, கட்டணங்கள் கடந்த ஜனவரி மாதம் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளன ஒவ்வொரு 1000 நிமிடத்துக்கும் 1.50 டொலர் என்ற அடிப்படையில் இந்த கட்டண அதிகரிப்புகள் மீளமைக்கப்படவுள்ளதாக பெல்பிட்ட குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment