Monday, February 20, 2012

நோர்வே ஏர்போட்டில் திருடி மாட்டிக்கொண்ட பயணி !


கடையில் திருடுவார்கள், ரோட்டில், பஸ்சில் எல்லாம் திருடுவார்கள். ஆனால் இது கொஞ்சம் வித்தியாசம். விமானநிலையத்திலும் திருட்டுகள் நடந்துள்ளது. ஆனால் விமானநிலையத்தில் பயணிகள் பரிசோதனை நிலையத்தில் எவராவது திருடுவார்களா ? எந்தப் பக்கம் பார்த்தாலும் பாதுகாப்புக் கமராக்கள் பொருத்தப்பட்டுள்ள இடத்தில் எவராவது திருடுவார்களா ? ஆனால் இந்தக் காணொளியைப் பாருங்கள். பயணிகள் பரிசோதனை நடந்தபின்னர், பயணி ஒருவர் தனது விலை உயர்ந்த மணிக்கூட்டையும் தங்கச் சங்கிலியையும் மறந்துபோய் விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். பின்னால் வந்த நபர் தனது பொருட்களை எடுத்தது பத்தாமல், அதனையும் களவெடுத்துள்ளார்.

சிறிது நேரத்தில், தனது கைக்கடிகாரத்தைக் காணவில்லை என்று உணர்ந்த பெண் பாதுகாப்பு அதிகாரிகளிடம் விடையத்தைத் தெரிவிக்க, அவர்கள் CCTV கமாராக்கள் மூலம் திருடனை துல்லியமாக அறிந்து அவர் விமானத்தில் ஏற முன்னரே அவரைக் கைதுசெய்துள்ளனர். இது நோர்வேயில் நடந்துள்ளது.



No comments:

Post a Comment