கனடாவுக்கு அனுப்புவார் என்று சொல்லி இலங்கையர்கள் 269 பேரை ஏமாற்றி பல கோடி ரூபாயை கறந்த அருணகிரிநாதன் ஜெயரூபன் குறித்த தகவல்கள் வெளியில் கசிந்து உள்ளன. இவரின் தகப்பன் அருணகிரிநாதன் ஓய்வு பெற்ற சிறைச்சாலை அதிகாரி. தாய் மகேஸ்வரி. சொந்த இடம் வடமராட்சியைச் சேர்ந்த புலோலி. மூத்த அண்ணன் ஜெயபரன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த உறுப்பினராக இருந்து யுத்தத்தில் இறந்தவர். இரண்டாவது அண்ணன் ஜெயநிமலன் முரசுமோட்டை முருகானந்த வித்தியாலயத்தில் ஆசிரியப் பணி புரிகின்றார்.
மூன்றாவது அண்ணன் ஜெயஸ்ரீதரன் பிரான்ஸ் நாட்டில் வசிக்கின்றார். நான்காவது அண்ணன் ஜெயபிரகாஷ் இத்தாலியில் வசிக்கின்றார். ஜெயரூபன் வவுனியா பிள்ளையார் கோவில் வீதியில் தங்கி இருந்தவர். யாழ்ப்பாணத்தின் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றில் பணியாற்றியவர். இவரிடம் ஏமாந்தோரில் மூவர் முஸ்லிம்கள். ஏனையோர் வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம் ஆகியவற்றைச் சேர்ந்த தமிழர்கள். ஐந்து இலட்சம் ரூபாய் முதல் 25 இலட்சம் ரூபாய் வரை இவர்களிடம் இருந்து பெற்று இருக்கின்றார்.
கனடாவுக்கு கொண்டு போய் சேர்க்கா விட்டால் பணத்தை திருப்பிக் கொடுப்பார் என்று வெற்றுக் கடதாசிகளில் கையொப்பம் இட்டுக் கொடுத்து இருக்கின்றார். ஆயினும் இது வரை யாருக்கும் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை.பணத்தைச் சுருட்டுக் கொண்டு மேலை நாடு ஒன்றுக்கு சென்று வசதியாக வாழ திட்டமிட்டு இருந்தார். இவரால் நட்டாற்றில் கைவிடப்பட்ட 269 பேரும் டோகோ, மாலிக் ஆகிய ஆபிரிக்க நாடுகளில் அந்தரித்துக் கொண்டு இருக்கின்றார்.
athirvu!
No comments:
Post a Comment