Saturday, February 11, 2012

யாழில் வசதி படைத்த பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள் ! அதிர்ச்சிக் தகவல்கள்!!


யாழ்.குடாநாட்டில் பெற்ற பிள்ளைகளினால் வயதான பெற்றோர்கள் கைவிடப்படும் அவல நிலை அதிகரித்துச் செல்வதாக யாழ்.முதியோர் இல்லத் தகவல்கள் தெரிவிக்கின்றன

யாழில் வசதிபடைத்த பிள்ளைகளினால் அவர்களது பெற்றோர்கள் முதியோர் இல்லங்களில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். பிள்ளைகளால் கைவிடப்பட்டு மிகவும் இக்கட்டான நிலையில் மனக் கவலைகளை நெஞ்சிலே சுமந்து கண்ணீர் சிந்தும் பெற்றோர்களைப் நாம் யாழ். கைதடி முதியோர் இல்லத்தில் சந்தித்தோம்.
வாழ்க்கையில் இது போன்ற ஒரு கொடுமை இல்லை என்றுதான் சொல்லவேண்டும். யாழில் பணமுதலைகளின் பெற்றோர்கள், அரச உத்தியோகத்தில் இருப்பவர்களின் பெற்றோர்கள், வங்கியில் வேலை செய்யும் பிள்ளைகளின் பெற்றோர்கள் எனப் பலதரப்பினர் அங்கு இருந்தார்கள்.
அவர்களின் கண்களில் கண்ணீரைத் தவிர நாம் வேறு எதையும் காணவில்லை. உண்மையில் பணத்திற்காகப் பிள்ளைகள் பாசத்தை விலைபேசியுள்ளார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
வயதான முதியவர்களை வீட்டில் வைத்திருந்தால் தங்களுக்குக் கௌரவக் குறைச்சல் எனப் பிள்ளைகள் நினைப்பதாகக் கண்ணீருடன் கதை கூறுகிறார் ஒரு தந்தை.
தனது பிள்ளைகள் இருவர் இலங்கை வங்கியில் வேலை செய்வதாகவும் அவர்களால் என்னைப் பராமரிக்க முடியாது என என்னை முதியோர் இல்லத்தில் சேர்த்துள்ளனர்.
வாழ்க்கையின் இறுதியில் இவர்களின் சந்தோசங்கள் எல்லாம் பறிக்கப்பட்ட நிலையில் மன வடுக்கலோடு தினமும் மரணத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் கூறுகிறார்.
யாழில் வசதிபடைத்த பணமுதலைகளின் கௌரவத்திற்கு முதுமையான பெற்றோர் தடையாக இருக்கிறார்களாம். பெற்ற பிள்ளை என்னை இந்த நிலமைக்கு கொண்டு வந்து விட்டு இருக்கிறான்.
“அவன் இந்த நிலமைக்கு என்னைக் கொண்டு வந்து விடுவான் எனத் தெரிந்து இருந்தால் அவன் அவனது தாயின் வயிற்றில் கருவாக இருக்கும் போதே அழித்திருப்பேன்” என வைராக்கியத்துடன் கூறுகிறார் ஒருதந்தை
இந்த நிலையில் இவர்களை மிகவும் அன்பாகவும் கௌரவத்துடனும் நடத்துகின்றனர் யாழ். கைதடி முதியோர் இல்லத் தாய்த் தெய்வங்கள்.
தந்தை. இறந்த பிறகு அவரது சடலத்திற்கு பிள்ளைகள் வந்து சண்டை பிடிப்பதாகவும் இறந்த பின்னர்தான் சடலத்திற்கு வருவார்கள் என யாழ். நாவக்குழி முதியோர் இல்லத் தாய்மார் கூறுகின்றார்கள்.
“ஏழைகளுக்கு பாசம் என்றால் என்ன என்று தெரியும், ஆனால் பணவசதி படைத்தவர்களுக்கு அது என்ன நிறம் என்று கூடத் தெரியாது” என அழுகிறார் ஒரு தந்தை.
இவர்களின் ஏக்கம் தவிப்பு எல்லாம் தங்கள் பிள்ளைகளோடு இறுதிக்காலத்தைக் கழிக்க வேண்டும். “நாங்கள் பிள்ளைகள் இருந்தும் யாரும் இல்லாத அநாதைகளாக அலைவதாக விக்கி விக்கி அமுது புலம்புகிறார் பிள்ளைகளினால் கைவிடப்பட்ட தந்தை.
இவர்களின் கண்ணீர்கள் ஆயிரமாயிரம் கைபேசுகிறது. பிள்ளைகளினால் கைவிடப்படும் நிலை யாழில் மாறவேண்டும் என்பதுதான் எங்கள் செய்தியின் எதிர்பார்பாக இருக்கிறது.

No comments:

Post a Comment