ஒரு ஈழத்து இளம் பெண் கைக்குழந்தையுடன் கண்ணிவெடி நிறைந்த இடத்தில் வந்து மாட்டிக்கொள்கிறாள். அவளை சிறிலங்கா இராணுவ அதிகாரி, விடுதலைப்புலி உறுப்பினர் தமிழ்செல்வி என்று சந்தேகப்பட்டு பிடித்து வைத்திருக்கின்றார். அந்த ஈழத்து பெண் கண்ணிவெடி நிலத்திலிருந்தும் அந்த இராணுவ அதிகாரியிடம் இருந்தும் தப்பி செல்கிறாளா? இல்லையா? ஏன்பதை பற்றி கூறுகிறது இத்திரைப்படம். இராணுவ அதிகாரியாக டேனியல் பாலாஜியும், ஈழத்து பெண்ணாக நீலீமா ராணியும் நடித்து உள்ளனர்.
‘மிதிவெடி’ திரைப்படம் பெப்ரவரி 17 முதல் இணையத்தளத்தில் வெளியீடாகிறது.
ஈழத்தில் உள்ள கண்ணிவெடிகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் பிரத்தியேகக் காட்சிகளையும், பாடல்களையும் கீழே உள்ள இணைப்பில் காணலாம்.
No comments:
Post a Comment