Friday, February 17, 2012

சிறையில் அடைக்கப்பட்ட ரஷ்யப் பிரதமரின் காணொளியால் பரபரப்பு!


ரஷ்யப் பிரதமாரான விளாடிமீர் புட்டினை கைது செய்து சிறையில் இருப்பது போன்ற வீடியோ ஒன்று வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த வீடியோ Youtube இல் பதிவு செய்யப்பட்டு சுமார் 72 மணித்தியாலங்களுக்குள் மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பார்த்துள்ளனர்.
யதார்த்தமாக ஆனால் போலியாகத் தயாரிக்கப்பட்ட வீடியோவை Youtube மூலம் ரஷ்யாவில் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த வீடியோவின் பின்னணியில் செய்தி வாசிப்பாளர் ஒருவரின் குரல் பதிவாகியுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு,
மூன்று மணி நேரத்துக்கு முன்னதாக புடின் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார்.
அடுத்து நீதிமன்றில் நீதிபதி விசாரிக்கிறார்?
உங்களின் பெயர் மற்றும் உங்களின் சொந்த நாடு? அதற்கு ரஷ்யக் குடியரசைச் சேர்ந்த விளாடிமீர் புடின் என்று பதில் அளிக்கிறார் ரஷ்யப் பிரதமர்.

No comments:

Post a Comment