பனிச் சறுக்கு விளையாடும் போது, பனிப்பாறைகளில் சிக்கி, நெதர்லாந்து இளவரசர் ஜோகன் பிரிசோ படுகாயமடைந்துள்ளார்.
நெதர்லாந்து இளவரசர் ஜோகன் பிரிசோ(வயது 43) தனது குடும்பத்தினருடன் ஆஸ்திரியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தார். தற்போது, ஆஸ்திரியாவில் குளிர்காலம் நிலவுவதால் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள ஆல்ப்ஸ் மலை முழுவதும் பனி படர்ந்துள்ளது. இந்நிலையில் இளவரசர் பிரிசோ, அங்குள்ள “லெக்” பகுதியில் பனிச் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டார். அப்போது 40 மீற்றர் நீளம், 30 மீற்றர் அகலம் கொண்ட பனிப்பாறை சரிந்ததில், இளவரசர் பிரிசோ சிக்கினார். பனிக்கட்டிக்குள் புதைந்த அவரை மீட்பு குழுவினர் தோண்டி எடுத்து மீட்டனர். 15 நிமிடங்கள் வரை இளவரசர் பனிக்கட்டிக்குள் சிக்கியதில் பனிப்பாறைகள் தாக்கி, அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனே அவரை வைத்தியசாலையில் சேர்த்தனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளவரசர் ஜோகன் பிரிசோவின் உடல்நிலை சீரடைந்துள்ளது என்றாலும், அவர் அபாயக்கட்டத்தை தாண்டவில்லை என்று நெதர்லாந்து அரசு தெரிவித்துள்ளது. |
No comments:
Post a Comment