
1997-ஆம் ஆண்டு இங்கிலாந்து மகாராணியார் சிறப்பு விருந்தினராக நேரில் வந்து பூஜையில் கலந்து கொள்ள… மருதநாயகம் படத்தின் தொடக்க விழா மிகச்சிறப்பாக நடந்தது.
மருதநாயகம் தொடக்க விழாவில், மருதநாயகம் தோற்றத்தில் கமல் ராணியாரையும் மற்ற சிறப்பு விருந்தினர்களையும் வரவேற்றார். தொடக்கவிழாவுக்கு முன்பே டிரைலருக்காக 5 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினார் கமல்! ஆனால் படம் ட்ரெயிலரோடு நின்றுபோனது.
காரணம், இந்தியா பொக்ரானில் போட்ட அணுகுண்டு. இதன் காரணமாக இந்தியா மீது பொருளாதாரத் தடை பாய்ந்தது. இதனால், கமல்ஹாசன் நம்பியிருந்த வெளிநாட்டு நிதியுதவி தடைபட்டதால் படம் கிடப்பில் போடப்பட்டது. 14 ஆண்டுகளுக்கு முன்பு மருதநாயகத்தின் பட்ஜெட் 50 கோடி ரூபாய். ஆனால் எந்த நிறுவனமும் கமல்ஹாசனுக்காக ரூ 50 கோடியை முதலீடு செய்ய அன்று தயாராக இல்லை. இதை அவரே பல பேட்டிகளில் கூறி வந்தார்.
கோசட்டையான் - சூப்பர் ஸ்டாரின் மற்றுமொரு போஸ்டர்
சமரன் - விசால் - புது பட கலெரி
ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி இசை வெளியீட்டு விழா
முன்னனி தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்ற - எடிசன் - விருது வழங்கும் விழா
ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி - பிரஸ் மீட் கலெரி
சமரன் - விசால் - புது பட கலெரி
ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி இசை வெளியீட்டு விழா
முன்னனி தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்ற - எடிசன் - விருது வழங்கும் விழா
ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி - பிரஸ் மீட் கலெரி
சில காலத்திற்கு முன்பு மருதநாயகத்தை தயாரிக்க சன் நிறுவனத்துடன் பேச்சு நடப்பதாக கூறப்பட்டது. ஆனால் நடக்கவில்லை. இந்த நிலையில் மீண்டும் மருதநாயகம் குறித்து கமல் பேச ஆரம்பித்துவிட்டார் கமல். இம்முறை தனது திரையுல நண்பர் ரஜினியையும் இணைத்துக் கொண்டு களம் இறங்கப் போகிறாராம். இதை கமலே மும்பை நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் உறுதிபடுத்தியிருகிறார்.
இதுபற்றி கமல் கூறியிருக்கும் கமல், "மருதநாயகத்தில் ரஜினிக்காகவே ஒரு பாத்திரம் உள்ளது. அவருக்கு மிகப் பொருத்தமாக இருக்கும். நாங்கள் இருவரும் 10 படங்களுக்கு மேல் இதற்கு முன் நடித்திருக்கிறோம். ஆனால் சமீபத்தில் எந்தப் படமும் சேர்ந்து நடிக்கவில்லை. இந்தப் படத்துக்கு எங்கள் இருவரையும் தவிர வேறு யாரும் பொருத்தமாக இருக்கவும் முடியாது. ரொம்ப நாள் பூனைக்கு மணி யார் கட்றதுன்னு யோசிச்சிக்கிட்டிருந்தாங்க! அதை நானே கட்டப்போறேன்," என்று கூறியுள்ளார்.
மருதநாயகம் திரைக்கதை தற்போது கமல் மேலும் மெருகேற்றியுள்ளாராம். இம்முறை மருதநாயகன் படத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதையில் பங்குபெற இருக்கிறார் என்கிறார்கள்.
No comments:
Post a Comment