Tuesday, February 21, 2012

2 மாதங்களாக உணவின்றி கடுங்குளிரில் உயிர்பிழைத்ததே அதிசயம்!!


ஸ்டாக்ஹோம், பிப்ரவரி 21- ஸ்வீடன் நாட்டில் 30 டிகிரி செல்சியஸ் குளிரில் பனிக்கட்டிகளால் மூடப்பட்டிருந்த காருக்குள் கடந்த இரு மாதங்களாக சிக்கிக்கொண்டிருந்த ஸ்வீடன் நாட்டவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 44 வயது பீட்டர் ஸ்கைல்பர்க் கடந்த டிசம்பர் மாதம் 19-ஆம் தேதி வடக்கு ஸ்வீடன் காட்டுப்பகுதி வழியாகக் காரில் சென்றுள்ளார். அப்போது அவரது கார் பனிக்கட்டிகளில் சிக்கி நின்றது. ஆள்நடமாட்டமில்லாத பகுதி என்பதால் உதவிக்கு யாரும் வரவில்லை. இதனால் அவர் காரினுள்ளேயே சிக்கிக்கொண்டார்.

மேலும், கடும் பனிப்பொழிவு ஏற்பட்டதால் கார் முழுவதும் பனியால் மூடப்பட்டது.

இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை பனிக்கட்டிகளை சாலைகளிலிருந்து அகற்றுபவர்கள் பீட்டரின் காரிலுள்ள பனிக்கட்டிகளை அகற்றினர். அப்போது காரின் பின் இருக்கையில் யாரோ இருப்பது கண்டு அதிர்ந்த அவர்கள், பாதிமயக்கத்தில் இருந்த பீட்டரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

கடந்த 2 மாதங்களாக உண்ண உணவின்றி பீட்டர் உருகும் ஐஸ்கட்டியை குடித்தே உயிர் வாழ்ந்துள்ளார். அவர் உணவின்றி கடுங்குளிரில் உயிர்பிழைத்ததே அதிசயம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment