Sunday, January 22, 2012

சடங்குகள் தருவது என்ன?



மகிழ்ச்சி,தமிழ்,தமிழர் பெருமை பேசில் பூரிக்கிறேன்,காரணம் தமிழன் அனுமான் போல தன் பெருமை தெரியாமல் அழிகிறான்,விளக்கம் சொல்லத்தான் யாரும் இல்லை,உறவுகளை இறுக்கவும் உண்மை அன்பை உறுதியாக்கவுமே சடங்குகள்,வாழ்க்கை சலிக்காமல் இருக்கவே விழாக்கள்,உடை ஆரோக்கியமாக காலநிலைக்கேற்ப அணிவதே நலம்,அவிஞ்சு வழிவதால் ஆரோக்கியம் கெடும்,அந்நிய மோகம் எந்த அளவு ஆதிக்கம் செய்கிறது என்பது அசிங்கம்,அடிமைத்தனம்!அன்று ஜாகெட் பெண்கள் போடல,ஆனால் மார்புக்கச்சை,கச்சை அணிந்தார்கள்!எதற்காக?இப்போது எதற்கு அணிகிறோமோ அதற்காக!பெண்கள் பூப்படைந்தால் எதற்கு சடங்கு செய்கிறோம்,அவளின் வாழ்க்கை நலம் பெற!வெட்கப்பட வேண்டியதில்லை,அது பாதுகாப்பாகும்,அந்த நாட்களில் ஆசிரியரிடம் சொல்லிவிட்டு வீடு செல்வதில் வெட்கம் அடைகிறோமா?மறைத்து வைக்க முடியுமா?ஒவ்வொருவருக்கும் தனியாக சொல்ல முடியுமா? அதுதான் சடங்கு வைத்து ஊருக்கே சொல்கிறோம்.வெள்ளையரும் பல கொண்டாட்டங்கள் வைத்துள்ளனர்!அதையெல்லாம் ஏனென்று கேட்காமல் மதுவருந்தி கொண்டாடும் என்னினமே மகிழ்ச்சிக்காக சில நலன்களுக்காக கொண்டாடும் நம் சடங்குகள் சுகாதாரமானவை.புறக்கணிக்கக் கூடிய விழாக்கள் தமிழரால் கொண்டாடப்படுவதில்லை,விபரங்கள் அழிந்துவிட்டன!வாய்மொழியால்சடங்குகளால் எங்கள் பழைய பழக்கவழக்கங்கள் பேணப்பட்டன,அதுவும் இல்லையென்றால் நமக்கென்று தனித்துவம் எதுவுமில்லை என்றாக அடிமையாக அழிவோம்!

No comments:

Post a Comment