[ ஞாயிற்றுக்கிழமை, 02 ஒக்ரோபர் 2011, 02:19.25 PM GMT ]
எதிர்காலத்தில் இலங்கை ஒரு செல்வந்த நாடாக மாறக்கூடிய தகவல் தமக்கு இன்று கிடைத்ததாக, கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த ஐனாதிபதி,
எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நிறுவனமொன்று இலங்கையில் எரிபொருள் மற்றும் பெற்றோலிய வளம் இருப்பதாக இன்று காலை எனக்கு அறிவித்தது.
இதன் காரணமாக நாம் எதிர்காலத்தில் செல்வந்த நாடாகக் கூடிய சாத்தியம் இருக்கின்றது என அவர் தெரிவித்தார்.
மன்னார் கடற்படுகையில் எரிவாயு வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியில் பெற்றோலிய அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டுள்ள கெய்ர்ன் இந்தியா எனும் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.
ஓகஸ்ட் மாத முற்பகுதியில் கிணறொன்றை தாம் அகழ்ந்ததாகவும் கடந்த வாரம் எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கெய்ர்ன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மன்னார் கடற்படுகையில் எஸ்.எல்.2007-01-001 எனக் குறிப்பிடப்பட்ட பகுதியில் பெற்றோலிய அகழ்வாராய்ச்சியில் ஈடுபடுவத்றகான உரிமை கெய்ர்ன் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
அந்நிறுவனத்தின் ஒரு அங்கமான கெய்ர்ன் லங்கா (பிரைவேட்) லிமிடெட் எனும் நிறுவனம் மன்னார் பகுதியில் மேற்படி ஆய்வில் ஈடுபட்டுள்ளது.
'சிக்யு' எனும் அகழ்வுக் கப்பலை பயன்படுத்தி அப்பகுதியில் 3 கிணறுகளை கெய்ர்ன் நிறுவனம் தோண்டவுள்ளது. இதற்கான செலவு 110 மில்லியன் டொலர்களாகும்.

No comments:
Post a Comment