Sunday, October 2, 2011

BBC தமிழோசை ஆனந்தி அக்காவின் கணவர் காலமானார் !


சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் தலைவரும், முன்னாள் பிபிசி தமிழோசை தயாரிப்பாளருமான ஆனந்தி சூரியப்பிரகாசம் அவர்களின் கணவர் சிவசாமி சூரியபிரகாசம் லண்டனில் காலமானார்.
உடல்நலம் குன்றிய நிலையில் தெற்கு லண்டன் சென் ஜோர்ஜஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நண்பகல் காலமானார் நமது இணையம் அறிகிறது.

லண்டன் நிலக்கீழ் தொடரூந்து நிறுவனத்தில் கணணித்துறையில் நீண்டகாலம் பணியாற்றி வந்த சூரியபிரகாசம் ஓய்வு பெற்ற பின் பொதுப்பணியில் ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்திற்கு நிதி உதவி உட்பட பல வழிகளில் அவர் உதவி புரிந்து வந்தார். அவரின் பிரிவால் துயருறும் அவரின் மனைவி மகள் பேரப்பிள்ளைகள் ஆகியோருக்கு சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதல்களையும் தெரிவிப்பதோடு  நமது இணையமும் தனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

No comments:

Post a Comment