Tuesday, December 23, 2014

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மக்களுக்கு கனடா வாழவைப்போம் அமைப்பு உலர் உணவு உதவி!



நாட்டில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கடும்மழை காரணமாக வன்னியில் குளங்கள் வான் பாய ஆரம்பித்துள்ளன. அத்துடன் வாய்க்கால்கள் மற்றும் சிறிய குளங்கள் குட்டைகள் நீரால் நிரம்பி வழிகின்றன.
கடும் மழை காரணமாக கிளிநொச்சியில் அநேக கிராமங்களில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கிளிநொச்சி மேற்கில் அக்கராயன், ஸ்கந்தபுரம் பகுதிகளில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாடசாலைகளில் தங்கியுள்ளனர்.
நூற்றுக்கணக்கான குடும்பங்கள் ஸ்கந்தபுரம் புதிய குடியிருப்பு கண்ணகிபுரம் முட்கொம்பன் ஆனைவிழுந்தான் போன்ற பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததன் காரணமாகவும் வீடுகள் ஊற்றுப்பிடித்துள்ளதன் காரணமாகவும் வீடுகளை விட்டு வெளியேறி அருகில் உள்ள பள்ளிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இன்று இவ்வாறு பள்ளிகளில் தங்கியுள்ள மக்களுக்கு பா.உறுப்பினர் சி.சிறீதரனின் ஏற்பாட்டில் கனடா வாழவைப்போம் அமைப்பு உலர் உணவு பொதிகளை வழங்கியுள்ளது.
இந்தப் பொதிகளை மக்களின் நிலைமைகளை பார்வையிட்டு வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை, கரைச்சி பிரதேச சபை தவிசாளர் நாவை.குகராசா, கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்களான தயாபரன், அன்ரன்டானியல், அக்கராயன் பிரதேச கட்சி அமைப்பாளர் கரன், அக்கராயன் பிரதேச தமிழரசுகட்சியின் தலைவர் சிறி, செயலாளர் கதிர்மகன், இளைஞர் அணி செயலாளர் கு.சர்வானந்தா உட்பட கட்சி நிர்வாகிகள் வழங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRXKaiu2.html

No comments:

Post a Comment