Tuesday, December 23, 2014

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற வாக்கிற்கமைய லண்டன் ஸ்ரீசெல்வ விநாயகர் ஆலய உதவிகள்: நாவை.குகராசா



உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இவ்வாரம் வெளியாகிறது!
[ செவ்வாய்க்கிழமை, 23 டிசெம்பர் 2014, 12:55.13 PM GMT ]
நடந்து முடிந்த க.பொ.த உ/த பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 27 அல்லது 28ம் திகதி வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவுற்று தற்போது பெறுபேறுகளை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்தார்.
இதேவேளை, க.பொ.த சா/த பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 28ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு ஜனவரி 5ம் திகதிவரை மேற்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRXKait6.html

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற வாக்கிற்கமைய லண்டன் ஸ்ரீசெல்வ விநாயகர் ஆலய உதவிகள்: நாவை.குகராசா
[ செவ்வாய்க்கிழமை, 23 டிசெம்பர் 2014, 11:36.02 AM GMT ]
பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் வேண்டுகோளுக்கு இணங்க லண்டன் ஸ்ரீ செல்வவிநாயகர் ஆலயம் கிளிநொச்சி பாரதிபுரம் கிராமத்தில் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கான உதவிகளை தொடர்ந்து வழங்கி விருகின்றது.
இதன் இன்னொரு கட்டமாக கடந்த 21ம் நாள் பாரதிபுரம் ஒக்ஸ்போட் கல்வி நிலையில் நிலைய நிர்வாகி கே.எம்.கேதீஸ் தலைமையில் உதவி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இதில் பிரதம விருந்தினராக கரைச்சி பிரதேச சபை தலைவர் நாவை.குகராசா, சிறப்பு விருந்தினராக அருட் தந்தை துரை போதகர் ஆகியோரும் பெற்றார்கள், மாணவர்கள் ஆசிரியர்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
இதில் உதவிகளை வழங்கி வைத்து உரையாற்றிய நாவை.குகராசா,
நாங்கள் தமிழர்கள் எமது அடையாளமாக நீண்ட வரலாற்றில் கொள்ளப்படுவது கல்வி ஒன்றுதான். தமிழர்களிடம் என்றும் அழியாதபடி கல்வி காப்பாற்றப்பட்டு வந்திருப்பதால்தான் தமிழர்களையும் அழிக்க முயற்சி கொண்டவர்களால் அதை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது.
கல்வியின் மூலமே நாம் எம்மை புதுப்பித்துக் கொள்கின்றோம். கிளிநொச்சியில் ஆரம்ப காலங்களில் வறுமையுடன் கூடிய கல்வியைத்தான் நம் மூத்தவர்கள் கற்றிருந்தார்கள்.
வறுமையிலும் அவர்கள் செம்மையை கடைப்பிடிக்கின்ற பாங்கை கற்றுக்கொண்டார்கள். இந்தக்கிராமங்கள் மிகவும் கடினமான ஏழை தொழலாளிகன் வியர்வைகளால்தான் உருவாக்கப்பட்டது.
அதில்தான் நாங்கள் நிற்கின்றோம். போர் எம்மை வாழ்வின் ஏராளம் சொத்து சுகங்களை அழித்தபோதும் மீண்டும் நாம் கைப்பிடித்து எழுவதற்கு கல்வியை நாம் மீள கொண்டு வந்தோம்.
அதை மேம்படுத்த புலம்பெயர் உறவுகள் வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற இலக்கணத்திற்கு அமைவாக உதவ வருகின்றார்கள். அதன் அடையாளமாக லண்டன் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தின் உதவி பெற்றாரை இழந்த பிள்ளைகளின் கல்வி நலன் கருதி கிடைத்திருக்கின்றது.
இதன் மூலம் நீங்கள் அறவு எனும் பொக்கிசத்தை நன்றிக்கடனாக நம் இனத்திற்கு கொடுக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
http://www.tamilwin.com/show-RUmszCRXKait5.html

No comments:

Post a Comment