Tuesday, December 23, 2014

K.பாலச்சந்தர் அவரது 84வயதில் இந்திய நேரம் இரவு மணியளவில் காலமானார்!


இயக்குனர் சிகரம் என்றழைக்கப்பட்ட K.பாலச்சந்தர் அவரது 84வயதில் காலமானார்!இவர் நீர்க்குமிழி படமூலம் இயக்குனராக அறிமுகமானார்!இவர் கமல்,ரஜனி,விவேக்........போன்றோரின் திரையுலகக் குருவாவார்!


திரைப்பட இயக்குனர் கே.பாலச்சந்தர் மரணம்!
[ செவ்வாய்க்கிழமை, 23 டிசெம்பர் 2014, 04:15.48 PM GMT ]
திரைப்பட இயக்குனர் கே.பாலச்சந்தர் (84) இன்று சுமார் 7 மணியளவில் மரணம் அடைந்தார். 
பாலசந்தருக்கு அண்மையில் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு, அதன் தொடர்ச்சியாக சுவாசக் கோளாறு ஏற்பட்டது.

இதையடுத்து, அவர் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், சிகிச்சை பலனின்றி அவர் இன்றிரவு சுமார் 7 மணியளவில் மரணம் அடைந்தார்.

அவரது உடலுக்கு ஏராளமான திரையுலக பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


http://www.cineulagam.com/tamil/news-tamil/celebrities/111683/

சிகரம் சரிந்தது -இயக்குனர் கே. பாலச்சந்தர் மரணம் (வீடியோ இணைப்பு)



சிகரம் சரிந்தது -இயக்குனர் கே. பாலச்சந்தர் மரணம் (வீடியோ இணைப்பு) - Cineulagam
தமிழ் சினிமா இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் அவர்கள் இன்று மரணமடைந்தார்.
தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களாக கருதப்படும் ரஜினி, கமல் போன்ற பலரை அறிமுகப்படுத்தியவர். 100 படங்களுக்கு மேல் இயக்கியவர். தாதா பால்சாகேப், பத்மஸ்ரீ, கலைமாமணி போன்ற எண்ணற்ற விருதுகளை வாங்கியவர்.
தமிழ் சினிமாவின் சகாப்தமாக கருதப்படும் பாலச்சந்தர் அவர்கள் சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதை தொடர்ந்து அவரது உடல் நலம் குறித்து நல்ல முன்னேற்றம் அடைந்து வந்தது.
இந்நிலையில் திடீரென சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார்.
http://www.cineulagam.com/tamil/videos/celebrities/iyakkunar-sigaram-director-k-balachandar-death/

கே.பாலச்சந்தர் மரணம்: கதறும் ரஜினிகாந்த், பாபநாசத்தில் சிக்கிய கமல் (வீடியோ இணைப்பு)

Published on December 23, 2014 18:10pm in Events
கே.பாலச்சந்தர் மரணம்: கதறும் ரஜினிகாந்த், பாபநாசத்தில் சிக்கிய கமல் (வீடியோ இணைப்பு) - Cineulagam
தமிழ் சினிமா இயக்குனர் கே.பாலச்சந்தர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பாலச்சந்தரின் உடல் தற்போது மருத்துவமனையிலிருந்து அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது. மருத்துவமனையில் கருணாநிதி, சரத்குமார் போன்ற பல பிரபலங்கள் அவரது உடலை பார்த்து அஞ்சலி செலுத்தினர்.
அங்கு இவரது சிஷ்யர்களில் ஒருவரான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளார். வந்ததிலிருந்தே கண்ணீர் வடித்தபடியே வாசலை நோக்கி பார்த்தபடி உள்ளார்.
உலகநாயகன் கமல்ஹாசன் பாபநாசம் படப்பிடிப்புக்காக திருநெல்வேலிக்கு சென்றதால் தற்போது அங்கிருந்து உடனடியாக வரமுடியாத சூழ்நிலையில் உள்ளார். இதனால் நாளை அதிகாலைக்குள் சென்னையை வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாலச்சந்தரின் குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் சினிஉலகம் ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறது.
http://www.cineulagam.com/tamil/news-tamil/events/111684/
http://www.cineulagam.com/tamil/videos/events/k-balachander-death-rajinikanth-sarathkumar-karunanidhi-visit-hospital/

No comments:

Post a Comment