யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Dueren ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பஞ்சலிங்கம் தயாளன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
மூத்த பிள்ளையாகப்பிறந்து பெற்றோருக்கு
குறைவராமல் செய்த தயாளா,
பிறந்தவுடன் உன் கருமையால் தாத்தா
சவியரை வெறுப்பாக்கிய கண்ணா,
ஐந்துவரை படிப்பில் சுட்டி அதன்
பின்னால் கிருஸ்ணலீலை,
பத்தை தாண்டாததால் தந்தை
தொழில்நுட்பம் கற்கவைக்க அங்கும்
வருடத்தில் மிகக்குறைந்தநாள் சென்ற சாதனை,
டொகா செல்லவென சென்று முகவர்
ஏமாற்றியதால் இந்தியா பாகிஸ்தான் வேதனை,
85இல் அகதியாக ஜேர்மனியில்
சுருள் முடியால் மைக்கல்,
அங்கிருந்து பிரான்ஸ் 91 இல்
தங்கை திருமணத்துக்கென
ஜேர்மனி திரும்பி சிறை,
94இல் அகதி அந்தஸ்த்து
95இல் கணவன் பதவி,
97, 99இல் தந்தை!
போராடி பேயாடி உனக்காக வாழ்ந்தாலும்
அருகிருந்த உறவுகளுக்கு உதவும்கரம்,
நண்பருக்கோ பிலாக்காய்!
பின்னாளில் மொட்டைபாஸ்!
எதற்காக சொல்லாமல் சென்றாயோ!
காரால் சுவரை மோதி வருடமொன்று
நோயால் வாடி கொரோனா காலத்தில்
அதனிடம் தப்ப காலனிடம் சென்றாயோ!
உன் பிரிவால் வருந்தும் சிலரில்
உனது கோபத்துக்காளான
உறவும் நட்பும் உனக்காக இரங்கியதும்
ஆர்வமான தொழில் நுட்பமும் உனது வெற்றியே!
No comments:
Post a Comment