Friday, March 27, 2020

கொரோனா சந்தேகம் ! யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி தொடர்பில் வெளியான மகிழ்ச்சியான தகவல்



நேற்றையதினம் கொரோனா சந்தேகத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு கொரோனா தொற்று இல்லை என பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவரது குருதி மாதிரிகள் ஆய்வுகூடப் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில் எதிர்மறையான அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இனங்காணப்பட்ட முதலாவது கொரோனா தொற்றுள்ள நபரின் சகோதரியின் மகளான தாவடியைச் சேர்ந்த 4 வயது சிறுமியே இவ்வாறு காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
சிறுமிக்கு வைரஸ் தொற்று அறிகுறிகள் காணப்பட்டதால் அவரது குருதி மாதிரி ஆய்வுகூடப் பரிசோதனைக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அந்த ஆய்வுகூடப் பரிசோதனையில் பாலகிக்கு கோரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சிறுமி வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், தற்போது வைத்தியசாலையின் கண்காணிப்பில் யாரும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

https://www.jvpnews.com/community/04/264260?ref=ls_d_jvp

No comments:

Post a Comment