Tuesday, August 13, 2019

திரு கணபதிப்பிள்ளை சுந்தரலிங்கம் மரண அறிவித்தல்!

எமது தாவடி தெற்கு சனசமூக நிலையத்தின் ஆரம்ப கால நிர்வாக சபை உறுப்பினரும் தற்போது நிலையத்தின் வாழ்நாள் போசகரும் ஆகிய
திரு.கணபதிப்பிள்ளை சுந்தரலிங்கம் அவர்கள் நேற்றைய தினம் இறைபதம் அடைந்தார்.

ஓய்வுநிலை அதிபராகிய இவர் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் சுந்தரலிங்கம் மாஸ்ரர் என அன்பாக அழைக்கப்படுபவர். தற்போதும் எமது சனசமூக நிலைய மாதாந்த பொதுக் கூட்டங்களில் பங்குபற்றி நிலையத்தின் மீள் ஆரம்பம் தொடர்பில் பெரும் அக்கறை கொண்டு எமக்கு வழிகாட்டியாக விளங்கியவர்.தற்போதும் இவர் தன் கைப்பட எழுதிய 1970ஆம் ஆண்டளவில் இடம்பெற்ற பொதுக்கூட்ட அறிக்கைகள் வரவு செலவு கொப்பிகள் எம்மிடம் உள்ளன.அக் காலம் முதல் நிலையத்தில் பல பதவிகள் வகித்து எமது தாவடிக் கிராமத்திற்கு பல நற் திட்டங்களை முன்னெடுத்ததாக நாம் அறிந்தோம். மேலும் எமது தாவடிக் கிராமத்தில் உள்ள அனைத்து கோவில்கள் மீதும் அளவற்ற பக்தி உடையவர். கைகளை மேலே உயர்த்திக் கூப்பியவாறு எமது தாவடி முருகன் ஆலயத்திலே தேவாரப் பதிகம் பாடும் அவர் நினைவுகள் எமை கண் கலங்க வைக்கின்றன. எவ்வாறாயினும் தன் வாழ்நாளில் ஆசிரியர்த் தொண்டு புரிந்து ஊருக்கும் பல நன்மைகள் புரிந்து இயற்கை மரணம் அடைந்த அமரர் சுந்தரலிங்கம் மாஸ்ரர் அவர்கள் சவம் ஆகவில்லை அவர் சிவம் ஆகிவிட்டார்.அவரது இழப்பை தாங்கும் வல்லமையை எமது அம்பலவாண தாவடி முருகன் அவரது குடும்பத்தினருக்கு வழங்கவேண்டும் என அனைவரும் பிரார்த்தனை செய்து அவரது ஆத்ம சாந்திக்காக அவர் தினமும் வழிபட்ட தாவடிப் பத்திரகாளி, முருகன்,பிள்ளையார் என எமது ஊர்த் தெய்வங்களை பிரார்த்திப்போம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி...


யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் தாவடியை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சுந்தரலிங்கம் அவர்கள் 12-08-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். 
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசதுரை செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும், 
மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், 
காலஞ்சென்ற நகுலேஸ்வரன், சுதர்சினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், 
காலஞ்சென்ற மஞ்சு, சிவகுமார்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், 
அன்னலக்சுமி, பாக்கியலீலா, பெரியதம்பி, குணராசா, விஜயராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும், 
பிரபாங்கன், பிரியங்கா, பவித்திரா, பிருந்தா, பைரவி, நர்த்தனன், ஜனதன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். 
அன்னாரின் இறுதிக்கிரியை 16-08-2019 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைப்பெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

 
மனைவி
 
சுதர்சினி - மகள்
 
சிவகுமார் - மருமகன்

No comments:

Post a Comment