Sunday, September 9, 2018

பல மில்லியன் வருடங்களுக்கு முன் ஏற்பட்ட 80 சதவீத உயிரின அழிவிற்கான காரணத்தை வெளியிட்ட விஞ்ஞானிகள்

துரதிஷ்ரவசமாக 250 மில்லியன் வருடங்களுக்கு முன்னரே புவி கடுமையாக மாற்றமடைந்திருந்தது.
இதற்கான காரணம் தற்போதுதான் வெளியாகியுள்ளது.
தற்போது சைபீயாவில் நடந்துகொண்டிருக்கும் எரிமலை வெடிப்புச் செயற்பாடு போன்று அப்போது ஏற்பட்ட எரிமலை வெடிப்புக்களால் புவியைச் சூழ சாம்பல் மூடுபடை ஒன்று உருவாகியிருந்தது.
இது அக்காலத்திற்குரிய பெரும்பாலான உயிரினங்களின் அழிவுக்குக் காரணமாகியிருந்தது என சொல்லப்படுகிறது.
"Great Dying" என்றழைக்கப்படும் இந் நிகழ்வே புவியில் நிகழ்ந்த அழிவுகளில் மிகக் கொடூரமான அழிவு என சொல்லப்படுகிறது.
இதன் காரணமாக கிட்டத்தட்ட 96 வீதமான கடல்வாழ் உயிரினங்கள் அழிந்து போயின.
அதேநேரம் தரைக்குரிய முள்ளந்தண்டுளிகள் 70 வீதமானவை இல்லாதொழிந்திருந்தன.
இத் தீவிர எரிமலை வெடிப்பு நிகழ்வின்போது கிட்டத்தட்ட 1.5 மில்லியன் கன கிலோமீட்டர் அளவிலான எரிமலைக்குழம்பு கக்கப்பட்டிருந்ததாக சொல்லப்படுகின்றது.

http://news.lankasri.com/science/03/187435?ref=ls_d_tech

No comments:

Post a Comment