Sunday, July 8, 2018

அகதிகளுக்கு உதவிய விவசாயிக்கு பிரான்ஸ் நீதிமன்றம் அளித்த இன்ப அதிர்ச்சி !

ஏராளமான அகதிகள் சட்ட விரோதமாக பிரான்ஸ் நாட்டுக்குள் நுழைய உதவிய விவசாயி ஒருவருக்கு சாதகமாக நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ள சம்பவம் ஐரோப்பிய நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் இத்தாலி எல்லை வழியாக அகதிகளைக் கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டதை எதிர்த்து Herrou என்னும் விவசாயி வழக்கு தொடர்ந்ததையடுத்து நேற்று வழங்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க இந்த தீர்ப்பு, கருத்தொருமித்தோர் இணைந்து செயல்படுவதை குற்றமாக்குவதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க அறைகூவல் விடுத்துள்ளது.
சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் என்னும் பிரான்சின் தேசிய கொள்கைகளில் ஒன்றான சகோதரத்துவக் கோட்பாட்டின் அடிப்படையில், அகதிகளுக்கு உதவியதற்காக Herrouக்கு தண்டனை வழங்க முடியாது என அரசியல் சாசன நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


சகோதரத்துவக் கோட்பாடு, தங்கள் நாட்டின் சட்டம் எப்படியிருந்தாலும், மனிதநேய நோக்கங்களுக்காக பிறருக்கு உதவுவதற்கு சுதந்திரம் அளிக்கிறது என நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டது.
பிரான்சுக்கும் இத்தாலிக்கும் இடையில் உள்ள Roya Valley என்னும் பகுதியில் ஏராளமான புலம்பெயர்வோருக்கு உதவியதற்காக ஒலிவ விவசாயியான Herrouக்கு 3000 யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட்டதையடுத்து அவர் உள்ளூர் ஹீரோவானார். தண்டிக்கப்பட்ட பிறகும் தனது செயல்களுக்கு வருத்தம் தெரிவிக்காத Herrou, பிரான்ஸ் சட்டத்திற்கு அடிபணியாமல் அகதிகளுக்கு தொடர்ந்து உதவுவேன் என்று கூறியிருந்தார்.
ஒரு முறை மேல் முறையீடு வெற்றி பெறாத நிலையில், அவர் அரசியல் சாசன நீதிமன்றத்திற்கு கொண்டு சென்ற வழக்கிற்கு தற்போது பெரிய வெற்றி கிடைத்துள்ளது.
அகதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும், இந்த தீர்ப்பு பிற ஐரோப்பிய நாடுகளுக்கு வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது எனலாம்.

http://news.lankasri.com/france/03/182885?ref=ls_d_france

No comments:

Post a Comment