Sunday, July 15, 2018

அகதிகள் பிரச்சினையால் கடுமையாக மோதிக்கொண்ட கனடா அமைச்சர்கள் !!


அகதிகள் பிரச்சினை தொடர்பாக கனடா அமைச்சர்கள் இருவர் கடுமையாக மோதிக்கொண்ட சம்பவம் கனடா அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஃபெடரல் அமைச்சர்கள் முதல் மாகாண அமைச்சர்கள் வரை அனைத்து அமைச்சர்களும் Winnipegஇல் புலம்பெயர்தல் பிரச்சினைகள் தொடர்பாக விவாதிப்பதற்காக கூடியிருந்தபோது, ஒண்டாரியோவின் பிரீமியரான Doug Ford புகலிடம் தேடுவோருக்கு உதவுவதற்காக பல மில்லியன் டொலர்கள் கோருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அந்த பிரச்சினையில் Doug Ford புலம்பெயர்வோரை சட்ட விரோத எல்லை தாண்டுபவர்கள் என விமர்சித்ததோடு, அவர்களால்தான் ஒண்டாரியோவில் வீடு வாடகைப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
அதோடு இந்த பிரச்சினை தொடர்பான அறிக்கை ஒன்றில் கையெழுத்திட மறுத்து ஒண்டாரியோவின் புலம்பெயர்தலுக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சரான Lisa MacLeod கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்த ஃபெடரல் புலம்பெயர்தல் துறை அமைச்சரான Ahmed Hussen, Fordஇன் கருத்து பொறுப்பற்றது, அந்த கருத்து பிரிவினைகளை ஏற்படுத்தக் கூடியது, பயத்தை உண்டாக்கக்கூடியது, அது மிகவும் ஆபத்தானது மட்டுமின்றி அது ஒரு கனடியர் தெரிவிக்கும் கருத்தாக இல்லை என்று கூறியதோடு, ஒண்டாரியோ பயத்தை உண்டாக்கும் விதத்தில் பேசுகிறது, புகலிடம் கோருவோரே குற்றவாளிகள் என்று கனடா மக்களின் மனதில் தோன்றும் அளவிற்கு மோசமான வார்த்தைகளை அவர்கள் வேண்டுமென்றே தெரிந்தெடுத்துப் பேசுகிறார்கள் என்றும் காரசாரமாக கூறியிருந்தார். இந்த கருத்து Lisa MacLeodக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவர் Ahmed Hussen கூறியது தவறு, அவர் என்னை கனடியர் அல்ல என்று கூறியுள்ளது. எனக்கு வருத்தமளிக்கிறது, அவர் என்னிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வருத்தத்துடன் தெரிவித்ததோடு ஏற்கனவே நாங்கள் நிதி பற்றாக்குறையில் இருக்கும்போது புலம்பெயர்வோர் பிரச்சினைக்கு உதவ எங்களிடம் போதுமான நிதி இல்லை என்றும் தெரிவித்தார்.
அமைச்சர்களுக்குள் மோதல்கள் ஏற்பட்டுள்ள நிலையில், குறிப்பிட்ட பிரச்சினைகள் தொடர்பாக பேச்சு வார்த்தைகள் நடத்துவதற்காக ஃபெடரல் கன்சர்வேட்டிவ்கள் அவசர கூட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளார்கள்.

http://news.lankasri.com/canada/03/183397?ref=ls_d_canada

No comments:

Post a Comment