Saturday, June 9, 2018

சர்வதேச நீதிமன்றத்தை ஏற்றுக்கொண்டேயாகவேண்டும். நெருக்கடிக்குள் சிறிலங்கா அரசு!

யுத்தக்குற்றங்கள் தொடர்பிலான சர்வதேச நீதிப்பொறிமுறையான சர்வதேச போர் குற்றவியல் நீதிமன்றத்தைஏற்றுக்கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் சபை ஸ்ரீலங்கா அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஸ்ரீலங்கா வெளிவிவகாரஅமைச்சருக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில்ரோம் உடன்படிக்கையை அங்கீகரிப்பதுடன், சர்வதேச போர் குற்றவியல்நீதிமன்றத்தையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.


போர்குற்றச்சாட்டுக்குமுகம்கொடுத்துள்ள ஸ்ரீலங்கா இராணுவத்தினர் உள்ளிட்ட அரச படையினரை தண்டிக்க ஒருபோதும்இடமளிக்கப் போவதில்லை என்று ஸ்ரீலங்காவின் தற்போதைய அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன உட்படஸ்ரீலங்காவின் சிங்கள தலைவர்கள் தொடர்ச்சியாக சூளுரைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஸ்ரீலங்காவின்வெளிவிவகார அமைச்சர் திலக் மாரபனவிற்கு கடிதமொன்றை எழுதியுள்ள ஐ.நா மனித உரிமைகள்ஆணையாளர் செயீத் ராத் அல் உசைன், சர்வதேச போர் குற்றவியல் நீதிமன்றின்ஒரு தரப்பான இணைந்துகொள்வதற்குத் தேவையான ரோம் உடன்படிக்கையை தாமதமின்றி ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தஉடன்படிக்கையை உள்நாட்டிலும் ஏற்றுக்கொள்ளும் நாடுகள் யுத்தக் குற்றங்கள் தொடர்பானசர்வதேச நீதிமன்றத்தினால் தொடரப்படும் வழக்கு விசாரணைகளில் பங்குதாரராக இருக்கும்.
காணாமல்ஆக்கப்பட்டவர்களின்குடும்பங்களுக்கு உண்மை, நீதி நிலைநாட்டப்படுவதுடன், மீள் நிகழாமை உறுதிப்படுத்தப்படுத்துவதுடன், தண்டனைகளில்இருந்து விலக்குப்பெறும் தண்டனை முக்தி முடிவுறுத்தப்பட வேண்டியது இன்றியமையாததுஎன்பதை வலியுறுத்தும் ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறும் ஸ்ரீலங்காவிடம் மனிதஉரிமைகள் ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்.
ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மனித உரிமைகளைஉறுதிப்படுத்துவதற்கு ஸ்ரீலங்கா அரசு இணங்கிய பல பரிந்துரைகள் தொடர்பிலும் ஸ்ரீலங்காவெளிவிவகார அமைச்சர் திலக் மாரபனவின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளார்.
இந்தத் துறைகளைஅடையாளம் கண்டுகொள்ளும் போது, 88 நாடுகளினால் முன்மொழியப்பட்டபரிந்துரைகள் - அறிவிப்புக்கள் மற்றும் ஸ்ரீலங்கா அரசின்சமர்ப்பிப்புக்கள் மற்றும் பதில்களையும், இரண்டாவது உலக காலஆய்வு கூட்டத்தில் நடைமுறைப்படுத்துவதாக இணங்கிய 113 பரிந்துரைகள் தொடர்பிலும்கவனம் செலுத்துமாறு மனித உரிமைகள் ஆணையாளர் செயீ் ராத் அல் உசைன் வலியுறுத்தியுள்ளார்.
சிவில் மற்றம்அரசியல் உரிமைகள், பொருளாதார, சமூக, கலாசாரஉரிமைகள, மாற்றத் திறனரிகளின் உரிமைகள், சிறுவர் உரிமைகள், பூர்வீகக் குடிகளின் உரிமகள்,வீட்டுப் பணியாளர்களின் உரிமைகள் உள்ளிட்ட மனித உரிமைகளைபாதுகாக்கும் சர்வதேச உடன்படிக்கைககளுக்கு அமைய சர்வதேச தரத்திலான சட்டங்களை இயற்றிக்கொள்ளுமாறும்ஸ்ரீலங்கா அரசை வலியுறுத்தியுள்ளார்.
புதிய அரசியல்யாப்பை தயாரிப்பதற்கு ஸ்ரீலங்கா அரசு முன்னெடுத்துள்ள முயற்சிகளை பாராட்டியுள்ளமனித உரிமைகள் ஆணையாளர் அதன்போது கவனம் செலுத்தப்பட வேண்டிய அடிப்படைக் காரணிகள்குறித்தும் கவனம் செலுத்தியுள்ளார்.
அரசியல்யாப்புமறுசீரமைப்பு நடவடிக்கையின் போது சம உரிமை இனப்பாகுபாடு அற்ற நிலை, அதிகாரப்பரவலாக்கல், நீதிமன்ற சுயாதீனத் தன்மை ஆகிய அடிப்படை சித்தாந்தங்கள்கருத்தில்கொள்ளப்பட வேண்டும் என்று அல்உசைன் வலியுறுத்தியுள்ளார்.
மனித உரிமைகள்ஆணையகங்களுக்கான சர்வதேச அமைப்பினால் ஏ தரத்திற்கு முன்னிலைப்படுத்தப்பட்ட ஸ்ரீலங்காமனித உரிமைகள் ஆணைக்குழுவின் சுயாதீனத் தன்மையை உறுதிப்படுத்துமாறும் ஸ்ரீலங்காஅரசிடம் ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார். இதன்போது சர்வதேச தரத்திற்கு ஏற்பஆணைக்குழுவிற்கு தேவையான ஆளணி, தொழில்நுட்பம் மற்றும் ஏனைய வளங்களையும்தடையின்றி பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அபிவிருத்திமற்றும் சுற்றாடல் தொடர்புடைய மனித உரிமைகள் குறித்து குறிப்பிடுகையில் கிளைபூஸெட்உரப் பாவணையை முழுமையாக தடை செய்ய வேண்டும் என்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் கோரிக்கைவிடுத்துள்ளார்.
அதேவேளை ஒப்புதல் வாக்குமூலங்களை பெற்றுக்கொள்வதற்காக கொடூரமானசித்திரவதைகளை ஆயுதமாக பயன்படுத்திவரும் ஸ்ரீலங்கா இராணுவம் உட்பட அரச படையினர்மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தி தண்டனைவழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர, தனதுஇந்தக் கடிதத்தில் தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பிலும் விசேட கவனம் செலுவுத்தியுள்ளார்.
சிறிலங்காவில் தொடர்ந்தும்நடைமுறையிலுள்ள மிகவும் கொடூரமான சட்டமாகக் கருதப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச்செய்வதுஉள்ளிட்ட ஸ்ரீலங்காவில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக எதிர்வரும் காலங்களில்நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய மேலும் பல பரிந்துரைகளையும் வெளிவிவகார அமைச்சர்திலக் மாரபனவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மனித உரிமைகள் ஆணையாளர்பரிந்துரைத்திருக்கின்றார்.
பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளஅனைவரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்சிறிலங்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். எவ்வாறாயினும் இந்த பரிந்துரைகளைநடைமுறைப்படுத்துவதற்கு சிறிலங்காவிற்கு 2022 ஆம் ஆண்டு வரை கால அவகாசம்இருக்கின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

http://www.ibctamil.com/politics/80/101714?ref=rightsidebar

No comments:

Post a Comment