Tuesday, June 5, 2018

என்ன கொடுமை! நிறைமாத கர்ப்பிணி பசுவிற்கு மரணதண்டனை விதித்த ஐரோப்பிய அதிகாரிகள்

எல்லை தாண்டி சென்ற காரணத்திற்காக கர்ப்பிணி பசுவுக்கு ஐரோப்பிய அதிகாரிகள் மரண தண்டனை விதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளில் ஒன்று பல்கேரியா. பல்கேரிய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கொபிலோவ்ட்சி கிராமத்தை சேர்ந்த இவான் ஹரலம்பியேவ் என்பவர் ஏராளமான மாடுகளை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் மேய்ச்சலுக்கு சென்ற பென்கா என்ற நிறைமாத கர்ப்பிணி பசு, பல்கேரிய எல்லைத் தாண்டி, செர்பியாவிற்குள் நுழைந்தது.

அது ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லாத நாடு. ஐரோப்பிய ஆணைய வழிகாட்டுதலின் படி, உரிய ஆவணம் இல்லாமல் எல்லைத் தாண்டினால் மரண தண்டனை விதிக்கப்படும்.
அதன்படி, எல்லைதாண்டி குற்றத்திற்காக கர்ப்பிணி பசுவுக்கு ஐரோப்பிய அதிகாரிகள் மரண தண்டனை விதித்துள்ளனர். இந்த தண்டனை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பென்காவிற்கு மரண தண்டனையில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி, சமூக வலைதளங்களில் ஆதரவு திரட்டப்பட்டு வருகிறது.


http://news.lankasri.com/europe/03/180437?ref=ls_d_world

No comments:

Post a Comment