Tuesday, June 5, 2018

அமெரிக்க தூதர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்: கொதிக்கும் ஜேர்மனி

அமெரிக்க தூதரான Richard Grenell ஐரோப்பாவில் கன்சர்வேட்டிவ்களை வலுப்படுத்த வேண்டும் என்று கூறியதைத் தொடர்ந்து ஜேர்மானிய அரசியல்வாதிகள் பலர் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
அவரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்னும் குரல் வலுத்து வருகிறது. தூதரக உறவுகளில் இந்த மனிதர் நடந்து கொள்ளும் முறை வரலாற்றிலேயே இதுவரை நடவாதது என Social Democrats (SPD)கட்சியின் முன்னாள் தலைவரான Martin Schulz நேற்று கூறினார்.
தான் விருந்தினராக வந்த ஒரு நாட்டில் நடு நிலையாக நடந்து கொள்வதற்கு பதிலாக ஒரு அரசியல் இயக்கத்தின் தூதர் போல Grenell நடந்து கொள்கிறார் என அவர் கூறினார்.

அமெரிக்காவில் போய் உட்கார்ந்துகொண்டு ஜேர்மனியின் தூதர், தான் அங்கு Democratsகளை வலுப்படுத்த வந்துள்ளதாகக் கூறினால் உடனடியாக அவரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.
அதுமட்டுமின்றி Grenell ஆஸ்ட்ரியாவின் கன்சர்வேட்டிவ் சான்ஸலரான Sebastian Kurzஐ விருந்துக்கு அழைத்துள்ளதோடு அவரை ஒரு ராக் ஸ்டார் என்று அழைத்து தான் அவரது பெரிய ரசிகர் என்றும் தெரிவித்ததும் ஜேர்மனி அரசியல்வாதிகளை எரிச்சல்படுத்தியுள்ளது.
இதனால் அவரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்னும் கோரிக்கை வலுத்து வருகிறது.

http://news.lankasri.com/germany/03/180461?ref=ls_d_germany

No comments:

Post a Comment