Tuesday, May 29, 2018

அல்லாஹு அக்பர் என கூச்சலிட்டு இளைஞர் துப்பாக்கிச்சூடு! பரபரப்பு சம்பவம்

கிழக்கு பெல்ஜியத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் புகுந்த இளைஞர் ஒருவர் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட மூவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு பெல்ஜியத்தின் Liege நகரில் குறித்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது.
அப்பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் புகுந்த குறித்த இளைஞர், பாடசாலையில் துப்புரவு பணியாளர் ஒருவரை பிணைக்கைதியாக பிடித்துள்ளார்.

உள்ளூர் நேரப்படி காலை 10.30 மணியளவில் நடந்த இச்சம்பவத்தை அடுத்து பொலிசாருக்கும் பயங்கரவாத தடுப்பு அதிகாரிகளுக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ பகுதிக்கு விரைந்த பொலிசார் மற்றும் பயங்கரவாத தடுப்பு அதிகாரிகள், குறித்த நபரிடம் சிக்கியுள்ள பெண்மணியை மீட்கும் நடவடிக்கையில் இறங்கினர்.

ஆனால் அந்த நபர் மறைவிடத்தில் இருந்து பொலிசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில் இரண்டு பொலிசார் மற்றும் பொதுமக்கள் ஒருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத தடுப்பு பொலிசார் திருப்பி தாக்கியதில் குறித்த நபரும் கொல்லப்பட்டுள்ளார். மேலும் பொலிஸ் அதிகாரி ஒருவரும் இச்சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.
கொல்லப்படுவதற்கு முன்னர் குறித்த நபர் அல்லாஹு அக்பர் என கூச்சலிட்டதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

தற்போது இச்சம்பவத்தை பயங்கரவாத தாக்குதல் என பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட அந்த 22 வயது இளைஞர் நேற்றைய தினம் சிறையில் இருந்து விடுதலையான நபராக இருக்கலாம் எனவும் பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
தொழில் நகரமான Liege ஜேர்மன் எல்லையில் அமைந்துள்ளது. பெல்ஜியத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதில் 4 பேர் சம்பவயிடத்தில் கொல்லப்பட்டதுடன் சுமார் 100 பேர் காயமடைந்தனர்.
மட்டுமின்றி கடந்த 2016 ஆம் ஆண்டு ஐ,எஸ் தீவிரவாதிகள் மேற்கொண்ட கொலைவெறி தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டனர்.


http://news.lankasri.com/othercountries/03/179918?ref=home-latest

No comments:

Post a Comment