Saturday, May 12, 2018

ஆண்கள் மட்டும் அனுமதிக்கபடும் ரகசிய இடங்கள்... இதுவரை வெளிவராத தகவல்!


தொழில்நுட்பத்தின் வளர்ச்சியினால் மனிதனின் காலடித் தடங்கள் படாத இடமே இல்லை என்று சொல்லலாம். காற்று மட்டுமே நுழைய முடிந்த இடத்திற்கு கூட சாகசப்பயணம் என்று சொல்லி பல கடுமையான சூழல்களையும் சமாளித்து சென்று வருகிறார்கள்.செவ்வாய் கிரகத்தில் கூட மனிதன் தங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது, இந்த நேரத்திலேயே செல்ல வேண்டியவர்கள் புக்கிங் எல்லாம் முடிந்துவிட்டிருக்கிறது. இந்த நேரத்தில் சில விசித்திரமான இடங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இயற்கையாக உருவான இடங்கள், செயற்கையாக மனிதனால் உருவாக்கப்பட்ட இடங்கள் என இரண்டுமே இந்த பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது
பாம்புத் தீவு :
இந்த இடம் பிரேசிலில் இருக்கிறது. சாவ் பவ்லா என்ற இடத்திலிருந்து சுமார் 93 மைல் தொலைவில் இருக்கிறது. இதனை எல்லாரும் பாம்புத் தீவு என்று தான் அழைக்கிறார்கள். இந்த இடத்திற்கு ஏன் இப்படியொரு பெயர் வந்தது தெரியுமா? ஒவ்வொரு பத்து சதுர அடிக்கும் குறைந்தது ஐந்து பாம்புகளையாவது நீங்கள் பார்க்கலாம்.
அத்தனையும் கொடிய விஷமுள்ளவை. ஒரு முறை அந்தப் பாம்பு கடித்தால் கடித்த இடமே சிதைந்துவிடும். அதனால் இந்த இடத்திற்கு நீங்கள் செல்வது என்பது பாதுகாப்பானது அல்ல.

லாஸ்கஸ் குகை :
மனித இனம் உருவான காலத்தில் இருந்த குகை இது. பிரான்ஸ் நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்திருக்கிறது. இந்த குகை சுமார் 20000 ஆண்டுகள் பழைமையானதாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அந்த குகையில் இருக்கிற இன்னொரு சிறப்பான விஷயம் ஓவியங்கள். பல்வேறு வடிவங்கள்,விலங்குகளின் உருவங்கள், என அங்கே வரைந்திருக்கிறார்கள்.

அழிவு :
1960 ஆம் ஆண்டு முதல் அந்த குகைக்குள் மனிதர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அந்த குகையில் படிந்திருக்கும் பூஞ்சான்கள், சிலந்தி போன்ற பூச்சியினங்கள் எல்லாம் விஷத்தன்மை வாய்ந்தது கடித்தால் உயிருக்கு உத்திரவாதமில்லை என்ற காரணம் இன்னொரு பக்கம் மனித நடமாட்டம் அதிகரித்தால் அந்த குகையில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் எல்லாம் அழிந்திடும் என்ற காரணமும் முன்வைக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு அதே போன்ற குகையை செயற்கையாக உருவாக்கி அந்த இடத்தை மக்கள் பார்வையிட வைத்திருக்கிறார்கள்.

ஏரியா 51 :
நெவேடா பாலைவனத்தில் அமைந்திருக்கும் இந்த இடத்தில் அமெரிக்காவின் ராணுவ ரகசியங்கள் வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் இங்கே பொதுமக்கள் யாருமே இந்த பகுதிக்கே வர அனுமதியில்லை.

வடக்கு சென்ட்டினென்டல் தீவு :
இந்த தீவு இந்தியாவில் தான் இருக்கிறது. அந்தமான் தீவுகளுக்கு மத்தியில் இருக்கிறது. இந்த தீவில் சில மக்கள் கூட்டம் வசிக்கிறார்கள். இவர்கள் யாருமே வெளியுலகத்தை தொடர்பு கொள்ள மறுக்கிறார்கள் அதே நேரத்தில் வெளியுலகத்திருந்த வசதிகளையும் மக்களையும் ஏற்றுக் கொள்ளவும் மறுக்கிறார்கள்.
2004 ஆம் ஆண்டு சுனாமி ஏற்பட்ட போது அங்கிருக்கும் மக்களை காப்பாற்ற ஹெலிகாப்டரில் வீரர்கள் சென்றிருக்கிறார்கள். ஆனால் அவர்களை தரையிறங்க விடாமால் அம்பு எய்து தொறத்தி விட்டார்களாம் அத்தீவு மக்கள். அந்த மக்கள் அந்த தீவில் சுமார் அறுபதாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. சுற்றுலா பயணிகள், ஆராய்ச்சியாளர்கள், அதிகாரிகள் என யாருமே அந்த தீவிற்கு செல்ல முடியாது. அதைவிட அந்த மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

போஹிமியான் தோப்பு :
இது ஆண்களுக்கான ஓர் விடுதி என்று கூட சொல்லலாம். அமெரிக்காவில் இருக்கிற இந்த இடம் சுமார் 2,700 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஒவ்வொரு ஆண்டு ஜூலை மாதமும் அங்கே இரண்டு வாரங்களுக்கு கொண்டாட்டங்கள் நடைபெறும்.
இதில் பங்கேற்க உலகம் முழுவதிலுமிருந்து விவிஐபிக்கள் வருவார்கள். அழைக்கும் போதே பிஸ்னஸ் பேசலாம் என்ற எண்ணத்துடன் இருப்பவர்கள் இங்கே வரவேண்டாம் என்று சொல்வார்களாம்... அங்கே மிகவும் ரகசியமான திட்டங்கள் தீட்டப்படுகிறது நாட்டின் முக்கியமான முடிவுகள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு யாரெல்லாம் வருகிறார்கள், எப்போது வந்து எப்போது கலைந்து செல்கிறார்கள், அங்கே என்ன மாதிரியான கொண்டாட்டங்கள் நடைபெறும் என்று எதுவும் வெளியுலகத்திற்கு தெரியாமல் மிகவும் சீக்ரெட்டாக வைத்திருக்கிறார்கள்.

இஷ் கிராண்ட் ஷெரின் :
இந்த இடம் ஜப்பானில் இருக்கிறது. ஜப்பான் நாட்டில் எண்பதாயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் இருக்கின்றன அவற்றில் இதுவும் ஒன்று நினைத்தால் அது தான் இல்லை.
இந்த கோவிலுக்குச் செல்ல மிக அதிகமாக செலவாகிடும். அதற்கு காரணம் கோவிலின் வடிவமைப்பு என்கிறார்கள். அதைத் தவிர ஒவ்வொரு 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை மில்லியன் டாலர் செலவில் புதிதாக கோவிலை இடித்து கட்டுகிறார்கள்.

மரணம் :
ஜப்பான் நாட்டில் கடைபிடிக்கப்பட்டு வரும் ஷிண்டோ என்ற கலாச்சாரத்தின் படி மரணிப்பது எல்லாம் மீண்டும் உயிர்பெறும் என்ற தத்துவத்திற்கு ஏற்ப இடித்து மறுபடியும் உருவாக்குகிறார்கள்.
ஜப்பானின் ஏகாதிபத்திய குடும்பத்தைச் சேர்ந்தவர் மட்டுமே இந்த பாரம்பரியமிக்க கோவிலுக்குள் செல்ல அனுமதி. அதைத் தவிர பிறரோ அல்லது சுற்றுலா பயணிகளோ யாரும் செல்ல முடியாது.

ஹியர்ட் தீவு :
இந்த தீவு ஆஸ்திரேலியாவில் இருக்கிறது. உலகின் கடைசியான இடம் என்று சொல்லப்படுகிறது. இது ஆஸ்திரேலியாவிற்கு அருகில் இருப்பதாக சொல்லப்பட்டாலும் உண்மையில் மடகாஸ்கர் மற்றும் அண்டார்டிகாவிற்கு நடுவில் இருக்கிறது.
இந்த தீவில் இரண்டு எரிமலைகள் இருக்கிறது.இரண்டுமே எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்ற நிலையில் கொதித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அவை முழுவதும் ஐஸ்கட்டியால் போர்த்தப்பட்டிருப்பதால் அவ்வளவு எளிதாக கண்டுபிடிக்க முடியாது.
இங்கே மனிதர்கள் மட்டுமல்ல பறவைகள், பென்குயின்கள், கடல்வால் உயிரினங்கள் என எதுவுமே வசிப்பதில்லை. இத்தீவிற்கு அருகில் எம்சி டொனால்ட் தீவு இருக்கிறது. அங்கே தான் ஆராய்ச்சியாளர்கள் சென்று ஹியர்ட் தீவு குறித்த ஆய்வினை மேற்கொண்டு வருகிறார்கள்.

பூவ்க்லியா :
இந்த இடம் இத்தாலியில் இருக்கக்கூடிய சிறிய தீவு. வெனீஸ் மற்றும் லிடோ நகரத்திற்கு இடையில் இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்னர், சுமார் பதினான்காம் நூற்றாண்டில் ஊரில் புபோனிக் எனப்படக்கூடிய மிக கொடிய விஷக் காய்ச்சல் பரவியது.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக உடலின் பாகங்கள் அழுகத்துவங்கும், விரைவில் மரணமடைந்துவிடுவார்கள். அதோடு இந்த நோய் பாதித்தவர்களை காப்பாறவும் முடியாது என்பதால் அந்த பாக்டீரியா விரைவில் பரவாமல் இருக்க நோய் பாதிப்பிற்கு உள்ளானவர்களை இங்கே கொண்டு வந்து போட்டுவிடுவார்களாம்.
அங்கே ஓர் கொடூர மருத்துவர் இருந்தார். அவர் தான் செய்யும் ஆராய்ச்சிகளுக்கும், கண்டுபிடிக்கும் மருந்துகளையும் இவர்கள் மீது பரிசோதித்து அவர்களை கொன்று குவித்தான் என்றும் சொல்லப்படுகிறது.

அனுமதியில்லை :
அங்கே தொடர்ந்து மரணங்கள் மட்டும் நிகழ்ந்திருப்பதால் பேய்களின் நடமாட்டம் இருக்கிறது என்றும் கிளப்பி விட அந்தப்பக்கமே யாரும் செல்ல முன்வருவதில்லை. பல ஆண்டுகளாக இந்த தீவு கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறது. அவ்வூர் மக்கள் சுற்றுலா பயணிகள் என யாருமே அங்கே செல்ல அனுமதியில்லை.

டோம்ப் கின் ஷி ஹுவாங் :
இந்த இடம் சீனாவில் இருக்கிறது. இங்கே டெரகோட்டாவில் செய்யப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட போர்வீரர்கள் ஒன்றாய் நிற்பது போல சிலைகள் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இங்கே சீனாவின் முதல் அரசராக கின் ஷி ஷூவாங்கின் கல்லறை இருக்கிறது. இங்கே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் இங்கே சாதரணமாக அவ்வளவு எளிதாக வந்து சென்று விட முடியாது கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, உரிய பாதுகாப்பு கவசங்களுடன் தான் அனுப்புகிறார்கள். கூடவே உயிருக்கு உத்திரவாதமில்லை என்றும் சொல்வதால் பலரும் வரத் தயங்குகிறார்கள்.

மெர்குரி :
எதிரிகளிடமிருந்து தன்னை காத்துக் கொள்ள அரசரின் பலே ஐடியா தான் இது. இங்கு ஹைலைட் என்ன தெரியுமா? இந்த இடத்தில் உள்ள சிலைகளில் எல்லாம் அதிகப்படியான மெர்குரி வெளிவருகிறது. அதனை சிறிது நேரம் சுவாசித்தால் யாராக இருந்தாலும் மரணம் நிச்சயம். அதனால் தான் உரிய பாதுகாப்புடன் அனுப்புகிறார்கள். வெளியில் நிற்கும் வீரர்களின் எண்ணிக்கை தான் இரண்டாயிரம் உள்ளே ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்களின் சிலைகள் இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

முப்பதாண்டுகள் :
உக்ரைனில் உள்ள கெர்னோபைல் என்ற இடத்தில் நியூக்ளியர் ரியாக்டர் வெடித்து விபத்திற்குள்ளானது. அதிலிருந்து வெளியான ரேடியோஆக்டிவ் துகள்கள் மேகங்களில் படிந்துவிட்டிருக்கிறது. விபத்து ஏற்பட்ட இடத்திலிருந்து பதினெட்டு மைல் வரையிலும் அதன் தாக்கம் இருக்கிறதாம். அதனால் அப்பகுதிக்குள் மக்கள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இந்த விபத்து சில நாட்களுக்கு முன்னரோ அல்லது சில வருடங்களுக்கு முன்னர் நடந்ததாகவோ நினைக்க வேண்டாம். சுமார் முப்பதாண்டுகளுக்கு முன்பு நடந்தது. இன்றளவும் அதன் தாக்கம் இருப்பதாக சொல்கிறார்கள்.

பக்கிங்காம் அரண்மனை :
யு.கே வில் இருக்கிற பக்கிங்காம் அரண்மனை உலகம் முழுவதிலும் சுற்றுலா பயணிகளை கவர்ந்த ஓர் இடமாக இருக்கிறது. பிரிட்டன் அரச குடும்பத்தினர் வாழும் அந்த அரண்மையை உரிய அனுமதியுடன் சுற்றுலா பயணிகள் பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள். அரண்மனையின் பல்வேறு இடங்களை பார்க்க அனுமதியளித்தாலும் மகாராணியின் படுக்கயறையை பார்க்க யாருக்குமே அனுமதி கிடையாதாம்.

http://www.manithan.com/entertainment/04/172360?ref=rightsidebar-lankasrinews

No comments:

Post a Comment